- Home
- Tamil Nadu News
- லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!
லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!
லீமா ரோஸின் என்ட்ரி திருவாடனைதொகுதியை ஒரு பணபலமும், அதிகார பலமும் மோதும் 'மெகா போர்க்களமாக' மாற்றியுள்ளது.

களமிறங்கும் லீமா ரோஸ்
நடிகர் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த 'விஐபி' தொகுதியான திருவாடானை, தற்போது 2026 தேர்தலுக்கு முன்பே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. கூட்டணிக் கட்சி சார்பில் தனக்கே இந்தத் தொகுதி வேண்டும் என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் களம் இறங்கியிருப்பது மற்ற அரசியல் புள்ளிகளை அதிர வைத்துள்ளது.
லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்'
தமிழகத்தின் 'லாட்டரி அதிபர்' என்று அறியப்படும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது சாதாரண சந்திப்பல்ல என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள். லீமா ரோஸின் சொந்த ஊர் திருவாடானை என்பதால், "சொந்த மண்ணில் களம் காண வேண்டும்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் ஒரு கட்சியை முன்னிறுத்தி, அதன் மூலம் திருவாடானை தொகுதியைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் அவர் வலுவாகப் பேசி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. அவரது அபரிமிதமான நிதி வலிமை, அதிமுக கூட்டணிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீமா ரோஸின் வருகை ஒருபுறம் இருக்க, ஏற்கனவே களத்தில் இருப்பவர்களோ விடுவதாக இல்லை. அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி கடந்த இரண்டு முறை முதுகுளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், இந்த முறை 'வெற்றி ஒன்றே இலக்கு' எனத் திருவாடானையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
கண் வைத்துள்ள ஓபிஎஸ் மகன்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயப்பிரதாப்பும் இந்தத் தொகுதியின் மீது ஒரு கண் வைத்துள்ளார். ஆளுங்கட்சி தரப்பிலும் வேட்பாளர் போட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கத் துடிக்கும் உதயநிதி ஸ்டாலினிடம், "இளைஞர் அணி சார்பாக திருவாடானையைத் தனக்கு ஒதுக்க வேண்டும்" என இன்பா ராகு கோரிக்கை வைத்துள்ளார். உதயநிதியின் ஆதரவு இவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மெகா போர்க்களமாக மாறி திருவாடணை
அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப், தன் தந்தைக்கு முதுகுளத்தூரில் சீட் மறுக்கப்பட்டால் பாதுகாப்பான இடமாகத் திருவாடானையையே கருதுகிறார். திமுக மாவட்டச் செயலாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவேளை இராமநாதபுரம் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்குப் போனால், திருவாடானையில் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ கருமாணிக்கமும் மீண்டும் களம் காணத் தயாராகி வரும் நிலையில், லீமா ரோஸின் என்ட்ரி இத்தொகுதியை ஒரு பணபலமும், அதிகார பலமும் மோதும் 'மெகா போர்க்களமாக' மாற்றியுள்ளது. லீமா ரோஸின் பிடிவாதத்தால் திருவாடானை தொகுதி யாருடைய வசம் செல்லும் என்பது இப்போதே மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.
