அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!
கூட்டணியை அறிவிக்காத மூன்று கட்சிகள் இருக்கிறது. ஒன்று தேமுதிக, அமமுக, மற்றொன்று தவெக. இதில், டிடிவி விரைவில் இந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அவர் அதிமுக கூட்டணியில் இணைவதை இபிஎஸ் தனது தொண்டர்களிடம் பெரிதாக சொல்வாரா?

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, “ஓரிரு நாளில் ஒரு புதிய கட்சி நமது கூட்டணியில் இணைய உள்ளது” என்று முக்கிய சமிக்ஞை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“திமுக கூட்டணியை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே பாமக நமது கூட்டணியில் இணைந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் ஒரு புதிய கட்சி நம்முடன் இணைய உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள். மூன்று மாதங்களில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் யார் அந்த பெரிய கட்சி என்கிற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானதை வைத்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு வியூகங்கள், பல்வேறு யூகங்களும் இயல்பாக எழத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக பாஜக தொடர்ந்து விஜயை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பார்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றபோது ‘‘நம்முடைய கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு புதிய கட்சி இணையப் போகிறது’’ என்றும் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிட்டு பேசியது தவெக-வைத்தான் என்று பரவலாக கூற்ப்பட்கிறது.
விஜயின் இந்த சிபிஐ விசாரணை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம் தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்திலே இப்படி வரக்கூடிய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் விஜயை இந்த கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் இதுபோன்று சிபிஐ வழக்குகள், மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலமாக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள். இருக்கக்கூடிய கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அதே போல விஜய்யும் இந்த கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கிறது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் தவெகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஆசை 100% இருக்கிறது. அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இடங்களில் பேசி இருக்கிறார்கள். உண்மையிலேயே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமையக்கூடாது என்று விஜய் கருதினால் அவர் நிச்சயமாக அதிமுக பாஜக கூட்டணிக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த கூட்டணி பலமாகும் என்று கூறி இருக்கிறார்கள். தொடர்ந்து திமுகவுக்கு எதிரான அந்த அணிகள் பிளவுபடாமல் வாக்குகள் மொத்தமாக ஒன்று சேரும் என்று தொடர்ந்து அதிமுக சார்பிலும், பாஜக தரப்பிலும் பேசிய வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் பிரச்சாரத்தில் மேற்கொள்ளும் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டு இருக்கும்போது தவெக கொடி ஒன்று அசைக்கப்பட்டது. அப்போது அதனை சுட்டி காண்பித்து, ‘‘இதோ கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்’’ என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். எனவே தவெகவின் வருகையை, அந்த கூட்டணி சந்தர்ப்பத்தை பாஜகவும், அதிமுகவும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இப்போது இபிஎஸ் எந்த கட்சியை சொல்கிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இன்னும் தமிழ்நாட்டில் கூட்டணியை அறிவிக்காத பெரிய கட்சிகள் என்று மூன்று கட்சிகள் இருக்கிறது. ஒன்று தேமுதிக. டிடிவி தினகரன் இருக்கிறார். மற்றொன்று தவெக. இதில், டிடிவி. தினகரன் விரைவில் இந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், டிடிவி.தினகரன் அதிமுக கூட்டணியில் இணைவதை இபிஎஸ் தனது தொண்டர்களிடம் ஒரு பெரிதாக சொல்வாரா? என்கிற சந்தேகம் உள்ளது. தேமுதிக இதுவரை அதிமுக கூட்டணியில் தான் இணையும் என்று கூறப்படுகிறது.
‘‘அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாம் தான் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறோம். அதனால் மகிழ்ச்சியாக சென்று வேலை பாருங்கள். வெற்றி நம்முடையதுதான்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி உற்சாகமாக பேசியிருக்கிறார். ஏற்கனவே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது இபிஎஸ், ‘‘ஒரு பிரம்மாண்ட கட்சி நம்முடைய கூட்டணிக்கு வரப்போகிறது ’’என்று உற்சாகமாக பேசியிருந்தார். அப்போதும் அவர் தமிழக வெற்றி கழகத்தை குறி வைத்துதான் அந்த வார்த்தைகளை சொல்லி இருந்தார். எனவே விஜயின் தவெகவை இந்த கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில் இபிஎஸ் கூறும் அந்தக் கட்சி தவெக தான் என்கிறார்கள்.

