- Home
- குற்றம்
- ரூ.2000 கொடுத்த இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்
ரூ.2000 கொடுத்த இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்
நாகர்கோவில் லாட்ஜ் ஒன்றில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விப**ச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மப்டியில் இருந்த உதவி ஆய்வாளரை லாட்ஜ் ஊழியர் அணுகியதை அடுத்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி 2 பெண்களை மீட்டு, 5 பேரைக் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் கடந்த 11ம் தேதி மப்டியில் ஒழுகினசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் அருள் மோகன் (22) என்பவர் அங்கு வந்தார். போலீஸ்காரர் என்று தெரியாமல் ஸ்பாவில் பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும் அதற்கு ரூ.2000 மட்டும் தந்தால் போதும் என்றும் கூறி அழைத்துள்ளார்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் அங்கு சென்றபோது விப**ச்சாரம் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலம்மாள் தலைமையிலான போலீசார் நாகர்கோவிலில் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஸ்பா என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து உல்லாசமாக இருக்க வைத்து பணம் வசூலித்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இரண்டு பேரும் ஸ்பா டெக்னீசியன் என்ற பெயரில் விப**ச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எபின் பிரிட்டோ (33), தஹில் (20) மற்றும் லாட்ஜ் மேலாளர் விஜிஜன் மிதுன்பாபு (31), லாட்ஜ் ஊழியர் அருள் மோகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

