- Home
- Cinema
- மீண்டும் நடிக்க வரும் விஜய்.. படத்தை உறுதி செய்த திமுக கூட்டணி எம்.பி.. அசத்தல் அப்டேட்..!
மீண்டும் நடிக்க வரும் விஜய்.. படத்தை உறுதி செய்த திமுக கூட்டணி எம்.பி.. அசத்தல் அப்டேட்..!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வரும் விஜய், தற்போது சத்தமில்லாமல் தனது அடுத்த படத்திற்கான அச்சாரத்தை போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

ஜனநாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என விஜய் சொன்னாலும், வரும் ஜூன் மாதம் அவர் மீண்டும் மேக்கப் போட்டு, கேமரா முன்னால் நிற்கப் போகிறார் என்கிற உறுதியான தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் திரையுலகில் 33 ஆண்டுகளாக உச்சநட்சத்திரமாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள விஜய், கடந்தாண்டு தவெகவை தொடங்கி தமிழக அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அவரது ரசிகர்களுக்கு மற்றொரு வேதனையான செய்தியையும் அறிவித்தார். அரசியலுக்காக இனி சினிமாவில் இருந்து விலகுவதாகவும், ஜனநாயகன் தனது கடைசி படம் என அறிவித்தார் விஜய்.
விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும், இது அவரது ரசிகர்களின் வாக்குகளை அனுதாப முறையில் பெறுவதற்கான ஒரு முயற்சி என்றே அரசியல் நிபுணர்கள் கூறி வந்தனர்.
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாக இருந்தது. இப்போது சென்சார் பிரச்சினையால் ரீலீசாவது தள்ளிப்போய் விட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வரும் விஜய், தற்போது சத்தமில்லாமல் தனது அடுத்த படத்திற்கான அச்சாரத்தை போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
வேள்பாரி படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை, எந்தவொரு முன்னணி நடிகரும் அந்தப் படத்தில் நடிக்க முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அந்த கதையின் உரிமையை வாங்கி வைத்துள்ள பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது வேள்பாரி படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பே ஆரம்பமாகும் என தகவல்கள்.
நடிகர் சூர்யாவை வைத்து, ஷங்கர் வேள்பாரி படத்தை எடுப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் விஜய் அந்தப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்.இதற்காக சில நாட்களுக்கு முன்னால் விஜயின் பனையூர் வீட்டில் வேள்பாரியை எழுதிய சு.வெங்கடேசன் எம்.பி., சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது கதையைப் பற்றிய இன்னும் சில விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட விஜய், மனசுக்குள்ள திரும்ப நடிக்கிற முடிவுக்கு வந்து விட்டார் என்கிறார்கள். இது தவிர வேள்பாரிக்காக விஜய்க்கு பேசப்பட்டு இருக்கிற சம்பளம் இதுவரை யாரும் வாங்காத தொகையாக இருக்கும் என்கிறார்கள்.
சினிமாவில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிற இயக்குநர் ஷங்கர், வேள்பாரியை தன்னுடைய அடுத்த இன்னிங்ஸுக்கான துவக்கமாக இருக்க வேண்டும் என திட்டம் போட்டு குறித்த நேரத்துக்கு படத்தை எடுத்து முடிக்கிற முடிவோடு இருக்கிறார். விஜய்- ஷங்கர் சந்திப்பு கூட நடந்து முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
