MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்புக்கு முன்னால் அந்தஸ்து ஒரு தடையல்ல; யாருக்காகவும் பிச்சை எடுப்பேன் : விஜய் ஆண்டனி

அன்புக்கு முன்னால் அந்தஸ்து ஒரு தடையல்ல; யாருக்காகவும் பிச்சை எடுப்பேன் : விஜய் ஆண்டனி

Vijay Antony Statements on Helping Others: விஜய் ஆண்டனி நான் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன் எனக்காக நீங்க பிச்சை எடுத்தா உயிர் பிழைச்சிடுவேன் என்று சொன்னால் கண்டிப்பாக நான் அவர்களுக்காக பிச்சை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Feb 22 2026, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் ஆண்டனி
Image Credit : Youtube Screenshot

விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நான் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன் எனக்காக நீங்க பிச்சை எடுத்தா உயிர் பிழைச்சிடுவேன் என்று சொன்னால் கண்டிப்பாக நான் அவர்களுக்காக பிச்சை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.இதனை முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
விஜய் ஆண்டனி இந்திய திரையுலக வாழ்க்கை
Image Credit : Google

விஜய் ஆண்டனி இந்திய திரையுலக வாழ்க்கை

விஜய் ஆண்டனி இந்திய திரையுலக திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இந்திய திரையுலகில் பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் மற்ற இசையமைப்பாளர்களின் எந்த சாயமும் இல்லாமல் தனித்துவமான இசையை வழங்குவதில் கில்லாடியான விஜய் ஆண்டனி, நடிப்பிலும் தனித்துவமாகவே இருந்து வருகிறார்.

35
விஜய் ஆண்டனியின் குடும்ப வாழ்க்கை:
Image Credit : our own

விஜய் ஆண்டனியின் குடும்ப வாழ்க்கை:

விஜய் ஆண்டனியின் குடும்ப வாழ்க்கை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த விஜய் ஆண்டனி பிரபல நாவல் ஆசிரியர், கர்நாடக இசை ஆர்வலர்‌.மாயவரம் சாமுவேல்வேதநாயகம் பிள்ளையின் குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்தது கன்னியாகுமரியாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் திருச்சி. விஜய் ஆண்டனி 7 வயதாக இருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது தந்தை இறந்துவிட்டாார். இதனால் மொத்தக் குடும்பமே நிர்கதியாக நின்ற நிலையில், தந்தையின்அரசு வேலை விஜய் ஆண்டனியின் தாய்க்கு கிடைக்க அனைவரும் திருநெல்வேலிக்கு சென்றனர். பள்ளிப்படிப்பை திருநெல்வேலியின் மேற்கொண்ட போது இசை ஆர்வத்தில் புதிய மெட்டுக்கள் மற்றும் வரிகளைப்போட்டு பாடும் திறமையுடன் இருந்தார்.படிக்கும் போதே நண்பர் மூலம் சவுண்ட் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். இந்த வேலையில் கிடைக்கும் குறைவான சம்பளத்தைக்கொண்டு தனக்கு தேவையான இசைக்கருவிகளை வாங்கி வீட்டிலேயே மினி ஸ்டூடியோவை அமைத்து இசையின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

45
இசையமைப்பாளர்
Image Credit : our own

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்: இசையின் மீது அளப்பெரிய காதல் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாக சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் ஜீவா மற்றும் சந்தியா நடிந்த டிஸ்யூம் படத்தில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்.. என்ற பாடல் தான் திரைத்திறையில் இவரைப் பிரபலமாக்கியது. தொடர்ந்து காதலில் விழுந்தேன், உத்தமபுத்திரன், எமன், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் இசையமைத்து உச்சத்திற்கு சென்றார் விஜய் ஆண்டனி.. இசைத்துறையில் கொடிக்கட்ட பறந்த இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

கதாநாயகன்: கடந்த 2012 ஆம் ஆண்டு வித்தியாசமானக் கதைக்களத்துடன் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படம் புதிய அவதாரத்தை அவருக்கு கொடுத்தது. தன்னுடைய உடல் பாவனைகளுக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்த இவர் சலீம். இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்தார் விஜய் ஆண்டனி.

55
விஜய் ஆண்டனி
Image Credit : Google

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரனின் தாக்கம்: பிச்சைக்காரன் படத்தில் தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சாமியாரிடம் சென்று கேட்க அந்த சாமியார் நீ 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தை கோயில் உண்டியலில் 12 மணிக்குள் போட வேண்டும் என்ற நிபந்தனையோடு சொல்லி இருப்பார். அப்படி செய்தால் உன் அம்மா விரைவில் குணமடைவார் என்று சாமியார் சொன்னார் அதைக் கேட்டு விஜய் ஆண்டனியும் அதே மாதிரியாக செய்து 48 நாட்கள் பிச்சை எடுப்பார். விஜய் ஆண்டனி அம்மா குணமடைவார்.

விஜய் ஆண்டனியின் சோகமான உறவு: சில மாதங்களுக்கு முன்பாக விஜய் ஆண்டனியின் முதல் மகள் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டால் இது அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று ஒரு பேட்டியில் கூட கூறியிருப்பார் அதன் பிறகு நம் குடும்பத்தினரை எந்த அளவிற்கு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கூட கூறியிருப்பார். அதன் பிறகு அவரது இரண்டாவது மகளை அன்பாகவும் பாதுகாக்கவும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிச்சைக்காரன் படத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனிடம் கேட்ட போது யாருக்காக வேணும்னா நான் பிச்சை எடுப்பேன் அது எங்க அம்மாவா இருக்கலாம் தம்பியா இருக்கலாம், தங்கச்சியா கூட இருக்கலாம். ஏன் உங்களுக்காகவும் இருக்கலாம் நீங்க என் வீடு தேடி வந்து உண்மையா கண்ணீர் மல்க சார் இந்த மாதிரி நான் ஒரு பிரச்சனையெல்லாம் மாட்டிக்கிட்டேன் நீங்க பிச்சை எடுத்தா உயிர் பிழைச்சிடுவேன் என்று சொல்லி வந்தால் நான் கண்டிப்பாக அவர்களுக்காக பிச்சை எடுப்பேன் என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் ஆண்டனி
சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வயது வெறும் எண்தான்! 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்!
Recommended image2
ராஜமௌலி படத்தில் ராமராக மகேஷ் பாபு? வைரலாகும் ‘வாரணாசி’ லுக்! ராமர் கெட்டப்பில் கசிந்த புகைப்படம்!
Recommended image3
உங்களுக்கு பிடித்த இந்த டாப் 10 பாடல்களும் ஒரே ராகம் தான் தெரியுமா? நீங்க முணுமுணுக்கும் 'ஹிட்' பாடல்களின் ரகசிய சூத்திரம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved