- Home
- Cinema
- ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Aishwarya Arjun Divorce Rumors : ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் திருமணத்தில், அவரின் மூத்த மருமகன் உமாபதி ராமையா இல்லாதது விவாகரத்து வதந்தியை கிளப்பியது.

Aishwarya Arjun Divorce Rumors
கோலிவுட் நட்சத்திர ஜோடியான ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜாவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தன் மகன் மற்றும் மருமகள் பற்றி பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடிகர் தம்பி ராமையா கடும் கோபத்தை வெளிப்படுத்தி, உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதம் நடந்தது. பேட்டிகளில் அவ்வளவு அன்பாக பேசிய இந்த ஜோடிக்கு என்ன ஆச்சு? கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆவதற்குள் இப்படி ஒரு முடிவா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
கோபப்பட்ட தம்பி ராமையா: உண்மையான நிலவரம் என்ன?
இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மூலமாக தம்பி ராமையா விளக்கம் அளித்துள்ளார்.
"எங்காவது நாங்க எங்க குழந்தைகளுக்கு விவாகரத்து ஆகிடுச்சுன்னு சொல்லியிருக்கோமா? யார் இந்த மாதிரி கீழ்த்தரமான வதந்தியை பரப்பினாங்கன்னு தெரியல. இது நூற்றுக்கு நூறு சதவீதம் பொய். இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னா உண்மையை சொல்லித்தான் ஆகணும். உமாபதியும் ஐஸ்வர்யாவும் சென்னை மயிலாப்பூரில் தனியாக ஒரு அழகான வீடு அமைத்து, ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்காங்க. நல்லா வாழ்ந்துட்டு இருக்கிற குழந்தைங்க வாழ்க்கையில ஏன் நெருப்ப மூட்டணும்?" என்று தம்பி ராமையா ஆவேசமாக கேட்டுள்ளார்.
கல்யாணத்துக்கு போகாததுக்கு என்ன காரணம்?
அர்ஜுன் சர்ஜாவின் இரண்டாவது மகள் திருமண நிகழ்ச்சிகளில் குடும்பத்தில் சிலர் கலந்துகொள்ளாதது பற்றியும் அவர் விளக்கம் கொடுத்தார். "சுமார் 12 நாட்கள் அங்க போய் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம்னு தான் நாங்க போகல. ஆனா சீக்கிரமே சென்னையில பிரம்மாண்டமா ரிசப்ஷன் நடக்கப்போகுது. நாங்க எல்லாரும் அந்த நிகழ்ச்சியில கலந்துக்க போறோம். அதுக்குள்ள யார் இந்த மாதிரி தப்பான பிரச்சாரத்தை ஆரம்பிச்சாங்கன்னு புரியல," என்று அவர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். தம்பி ராமையாவின் இந்த விளக்கத்தின் மூலம், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
சந்தேகத்தை கிளப்பிய அந்த புகைப்படங்கள்!
இத்தாலியில் உள்ள அழகான டஸ்கனி நகரத்தில் அர்ஜுன் சர்ஜா குடும்பத்தில் சமீபத்தில் திருமண கொண்டாட்டம் களைகட்டியது. அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது நீண்ட நாள் காதலரான இசை நட்டாரை அக்டோபர் 19ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் 14 வருட காதலுக்கு இரண்டு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்ததால், முதலில் இந்து முறைப்படியும், பிறகு கிறிஸ்தவ முறைப்படியும் கல்யாணம் ரொம்ப பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தின் அழகான புகைப்படங்களை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இந்த இனிமையான செய்தியை உலகிற்கு தெரிவித்தார்.
ஆனால், இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே அந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது சந்தேகத்தை கிளப்பியது! கல்யாணத்தின் எந்த ஒரு புகைப்படத்திலும் அர்ஜுன் சர்ஜா குடும்பத்தின் மூத்த மருமகனான நடிகர் உமாபதி ராமையா இல்லை. அந்த நிகழ்ச்சியில் அர்ஜுன் சர்ஜா, மனைவி நிவேதிதா மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்திய கலாச்சாரத்தில் மைத்துனி கல்யாணம் போன்ற முக்கியமான சுபநிகழ்ச்சியில் மூத்த மருமகன் இல்லாதது சாதாரண விஷயம் இல்லை என்று சோஷியல் மீடியாவில் விவாதங்கள் தொடங்கின. இந்து முறை கல்யாணத்திலும் இல்லை, கிறிஸ்தவ முறை கல்யாணத்திலும் உமாபதி ராமையா கலந்துகொள்ளாததை கவனித்த நெட்டிசன்கள், "ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இடையே எல்லாம் சரியா இருக்கா? அல்லது திருமண வாழ்க்கையில் ஏதாவது விரிசல் விழுந்துருச்சா?" என்று பலமாக சந்தேகப்பட ஆரம்பித்தனர். இந்த புகைப்படங்களில் அவர் இல்லாதது தான் கடைசியில் இருவரின் விவாகரத்து வதந்திக்கு காரணமாக அமைந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





