MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெளிநாட்டில் ஃபிரண்ட்ஸோடு ஜாலியாக பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன் - வைரலாகும் பார்ட்டி கிளிக்ஸ்

வெளிநாட்டில் ஃபிரண்ட்ஸோடு ஜாலியாக பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன் - வைரலாகும் பார்ட்டி கிளிக்ஸ்

உமாபதியை கரம்பிடிக்க உள்ள நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, வெளிநாட்டில் தன்னுடைய ஃபிரண்ட்ஸோடு பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 07 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Arjun Daughters Anjana and aishwarya

Arjun Daughters Anjana and aishwarya

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் இவர் தற்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

28
aishwarya Arjun

aishwarya Arjun

இதில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, சினிமாவில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த பட்டத்து யானை திரைப்படம் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக அறிமுகமான படம். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

38
aishwarya Arjun bachelor party

aishwarya Arjun bachelor party

அதன்பின்னர் பிரேம பரவா என்கிற கன்னட படத்திலும், சொல்லிவிடவா என்கிற தமிழ் படத்தில் மட்டும் நடித்த ஐஸ்வர்யாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி பிசினஸை கவனிக்க தொடங்கினார்.

48
aishwarya Arjun bachelor party photos

aishwarya Arjun bachelor party photos

இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

58
aishwarya Arjun with her sister

aishwarya Arjun with her sister

ஐஸ்வர்யாவும் உமாபதியும் காதலித்து பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர். அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோது உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

68
aishwarya Arjun friends

aishwarya Arjun friends

பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியதை தொடர்ந்து தற்போது திருமணத்துக்கு இருவருமே தயாராகி வருகின்றனர். ஐஸ்வர்யா - உமாபதி ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

78
aishwarya Arjun Photos

aishwarya Arjun Photos

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோருக்கு நேரில் அழைப்பு விடுத்திக்கிறார் தம்பி ராமையா. கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் பண்ணையில் தான் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

88
aishwarya Arjun Bachelor Party in Bali

aishwarya Arjun Bachelor Party in Bali

இந்நிலையில், திருமணத்துக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தன்னுடைய தங்கை அஞ்சனா மற்றும் தன்னுடைய ஃபிரண்ட்ஸை பாலி தீவுக்கு அழைத்து சென்று அங்கு பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நயன் - விக்கிக்கே டஃப் கொடுப்பங்க போல.. கணவருடன் ஃபாரீன் டூர்.. ஸ்டைலாக மாறி அசர வைத்த பிக்பாஸ் தாமரை..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved