MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?

இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?

Tamilnadu Rain: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 26 2026, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வானிலை மையம்
Image Credit : Asianet News

வானிலை மையம்

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று இரவு நேரங்களில் விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : our own

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

35
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அதேபோல் நாளை தென் தமிழகம் கடலோர மாவட்டங்கள் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : our own

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Image Credit : Google

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்திற்கு இது ஒரு சிறந்த நாளாக அமைந்தது. இன்றும் மழை பெய்யும், ஆனால் நேற்று போல் பரவலாக இருக்காது. திண்டுக்கல், திருப்பூர் மண்டலங்களுக்கும் ஓரளவு மிதமான மழை பெய்யும்.

இன்று கன்னியாகுமரி மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கோவை மண்டலங்களில் உள்ள கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வானிலை
வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் திடீர் தளர்வு..! இனி இவர்களின் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்..!
Recommended image2
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image3
Now Playing
சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
Related Stories
Recommended image1
கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
Recommended image2
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved