MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

KN Nehru: அமலாக்கத்துறை அனுப்பிய தகவல்களில் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. எனவே அந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்தது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 26 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமைச்சர் கே.என்.நேரு
Image Credit : Asianet News

அமைச்சர் கே.என்.நேரு

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறி அத்துறையை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

24
 அமலாக்கத்துறை கடிதம்
Image Credit : F/KN Nehru

அமலாக்கத்துறை கடிதம்

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வு அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. எனவே அந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

Related Articles

Related image1
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Related image2
அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
34
லஞ்ச ஒழிப்புத்துறை
Image Credit : our own

லஞ்ச ஒழிப்புத்துறை

ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் தமிழ் செல்வன் ஆஜராகி நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார்.

44
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Image Credit : our own

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

இதனை கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் தானே ஆகிறது. தேவைப்பட்டால் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறையில் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தற்போது ஐ.எஸ்.இன்பதுரை முடிவு செய்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு எதிராக அடுத்தடுத்து அஸ்திரங்களை அதிமுக ஏவி வருவது முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
சென்னை உயர் நீதிமன்றம்
அமலாக்க இயக்குனரகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Recommended image2
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Recommended image3
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள்!
Related Stories
Recommended image1
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Recommended image2
அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved