- Home
- Cinema
- காந்தாரா முதல் டியூட் வரை... ஓடிடியில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ
காந்தாரா முதல் டியூட் வரை... ஓடிடியில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. இதில் கோலிவுட் திரைப்படமான டியூட் இடம்பெற்று உள்ளது.

Top 5 Most Watched Movies and Web Series on OTT
ஓர்மேக்ஸ் மீடியா ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த வாரத்தில் எந்தப் படம் அதிகம் பார்க்கப்பட்டது என்ற பட்டியலை ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் கன்னட சினிமா கொடுத்த பான் இந்தியா படம் முதலிடத்தில் உள்ளது, கோலிவுட் ஜென் Z படம் டாப் 2-ல் உள்ளது. ஹிந்தி படம் கடைசி இடத்தில் உள்ளது. அந்தப் படங்கள் எவை? அவற்றை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
காந்தாராவுக்கு டஃப் கொடுத்த டியூட்
ஓர்மேக்ஸ் மீடியா அறிவிப்பின்படி, ஓடிடியில் முதலிடத்தில் `காந்தாரா சாப்டர் 1` உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் 28 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஓடிடியில் இந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் `டியூட்` படம் 2ம் இடத்தில் உள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான இப்படம் 24 லட்சம் பார்வைகளுடன் டாப் 2-ல் உள்ளது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள்
பாலிவுட் படமான `பாராமுல்லா` டாப் 3-ல் உள்ளது. சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லராக உருவான இந்த படத்தை ஆதித்யா சுஹாஸ் இயக்கியுள்ளார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான இப்படம் 22 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஹாலிவுட் படமான `ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்` ஓடிடியில் கலக்கி வருகிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படம் 20 லட்சம் பார்வைகளுடன் இந்தியாவின் ஓடிடி டாப் 4-ல் இடம்பிடித்துள்ளது. பாலிவுட் படமான `ஜாலி எல்எல்பி 3` இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான இப்படம் 16 லட்சம் பார்வைகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் அக்ஷய் குமார் மற்றும் ஹர்ஷத் வார்சி நடித்துள்ளனர்.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்களின் பட்டியலில் மகாபாரதம் ஏக் தர்மயுத் திரைப்படம் 16 லட்சம் வியூஸ் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. CO-ED வெப் தொடர் 18 லட்சம் வியூஸ் உடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது. சோனி லிவ் தளத்தில் உள்ள மகாராணி சீசன் 4 வெப் தொடர் 23 லட்சம் வியூஸ் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் டெல்லி கிரைம் சீசன் 3 வெப் சீரிஸ், 40 லட்சம் வியூஸ் உடன் 2ம் இடத்தில் உள்ளது. தி ஃபேமிலி மேன் சீசன் 3 வெப் தொடர் 62 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

