இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:12 PM (IST) Dec 03
அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள ஓசோன் ஓட்டை எதிர்பார்த்ததை விட மிக வேகமாக மீண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் வெற்றியால், இந்த ஆண்டு ஓசோன் ஓட்டை முன்னெப்போதையும் விட விரைவாக மூடிக்கொண்டது.
10:53 PM (IST) Dec 03
பீடி மீதான வரி விகிதங்களில் எந்த உயர்வும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார். ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய புதிய கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த வரிச்சுமை அதிகரிக்காது என்றும் உறுதியளித்தார்.
10:49 PM (IST) Dec 03
அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிமுகவில் இருந்து எடப்பாடி ஐயா என்னைத் தூக்கிவிட்டார். இப்போது எனக்கு மன வேதனையாக இருக்கிறது. இப்போது நான் தவெகவில் சேரலாமா? என நீங்கள் கருத்து சொல்லுங்கள்.
10:44 PM (IST) Dec 03
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 359 ரன்களை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. எய்டன் மார்க்ரம் அட்டகாசமான சதம் விளாசினார்.
10:17 PM (IST) Dec 03
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, நவம்பர் மாதத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. ஓய்வு நேர (FDTL) விதிமுறைகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவை இந்த ரத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
10:03 PM (IST) Dec 03
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா புதிய ஜெர்சியை வெளியிட்டார்.
09:41 PM (IST) Dec 03
சாதகமான ரிப்போர்ட்களை உருவாக்க முனைந்தவர்கள் திமுக தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமையையே ஏமாற்ற முயற்சித்த அவர்கள் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதுதான் அறிவாலயத்தில் விவாதிக்கக் கூடிய ஹாட் டாபிக்
09:24 PM (IST) Dec 03
திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சிஆர்பிஎஃப் படையினரை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். திருப்பரங்குன்றம் காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
08:42 PM (IST) Dec 03
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறி மலைக்குச் செல்ல முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
08:22 PM (IST) Dec 03
Tamil Nadu School Holiday: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
08:01 PM (IST) Dec 03
பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
07:22 PM (IST) Dec 03
இன்று கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
07:19 PM (IST) Dec 03
எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒத்துழைத்தால் அவரது தலைமையில் அதிமுக செயல்படும். இல்லையேல் அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமை பல திடுக்கிடும் முடிவுகளை எடுக்கவும் முடிவெடுத்துள்ளது’’ என அடித்துச் சொல்கிறார் மேலிட பாஜக முக்கிய நிர்வாகி.
07:11 PM (IST) Dec 03
மத்தியப் பிரதேசத்தில், 50 அடி உயரப் பாலத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த 25 வயது இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதற்காக சூரிய அஸ்தமனத்தின் போது வீடியோ பதிவு செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
06:23 PM (IST) Dec 03
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். 2 அதிரடி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
06:22 PM (IST) Dec 03
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வாலி, ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடலை குடி போதையில் எழுதி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
05:56 PM (IST) Dec 03
ஸ்மார்ட்போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற தனது முந்தைய உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவால் தனியுரிமை மீறல் குறித்த சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
05:47 PM (IST) Dec 03
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கிங் விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட் சூப்பர் சதத்துடன் இந்திய அணி 358 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும் அரை சதம் அடித்து அசத்தினார்.
04:59 PM (IST) Dec 03
கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 35லிருந்து 33ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
04:59 PM (IST) Dec 03
சிவன் பாடல் ஒன்று இயக்குநர் ஷங்கரின் படத்தில் காதல் பாடலாக வந்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த மாஸ்டர் பீஸ் பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
04:50 PM (IST) Dec 03
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், 'ஓர் ஏக்கர், ஓர் பருவம்' என்ற புதிய இலக்கை விவசாயிகளுக்கு அளித்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
04:39 PM (IST) Dec 03
இரண்டு விஷயத்தையும் திமுக அரசு எடுத்து ஏதாவது செய்து விடுமோ என்கிற காரணத்தால் திமுக எதிர்ப்பு என்ற நிலையை மறந்து விட்டார் நயினார் நாகேந்திரன்.
04:34 PM (IST) Dec 03
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ரன் மெஷின் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
04:33 PM (IST) Dec 03
சென்னையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய நபரிடம் நகை மற்றும் பணத்தை இழந்து ஏமாந்துள்ளார். புகாரின் பேரில் விசாரித்தபோது, அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.
04:21 PM (IST) Dec 03
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, ட்ரம்ப் நிர்வாகம் 19 நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நாடுகள் 'அதிக ஆபத்தான நாடுகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
04:15 PM (IST) Dec 03
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். சிஎஸ்கே கேப்டானான ருத்ராஜ் சதத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
04:02 PM (IST) Dec 03
அடுத்த 12 மாதங்களில் ராயல் என்ஃபீல்டு நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல்கள் சக்திவாய்ந்த எஞ்சின்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் வருகின்றன.
03:58 PM (IST) Dec 03
Dec 04 Thulam Rasi Palan : டிசம்பர் 04, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:55 PM (IST) Dec 03
Dec 04 Viruchiga Rasi Palan : டிசம்பர் 04, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:50 PM (IST) Dec 03
Dec 04 Dhanusu Rasi Palan : டிசம்பர் 04, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:48 PM (IST) Dec 03
Dec 04 Magara Rasi Palan : டிசம்பர் 04, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:46 PM (IST) Dec 03
Dec 04 Kumba Rasi Palan: டிசம்பர் 04, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:44 PM (IST) Dec 03
மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு மூன்று ஹேஷ்டேக்குகள் மட்டுமே பயன்படுத்தும் புதிய வரம்பை சோதனை செய்து வருகிறது. 30 ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தும் தற்போதைய முறையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகும்.
03:44 PM (IST) Dec 03
Dec 04 Meena Rasi Palan: டிசம்பர் 04, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:44 PM (IST) Dec 03
03:43 PM (IST) Dec 03
காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு திமுகவிடம் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
03:39 PM (IST) Dec 03
மெகா பட்ஜெட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியதால், அவருக்குப் பதிலாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
03:15 PM (IST) Dec 03
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க உள்ள புதிய படத்தை அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக திரு வீர் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
03:15 PM (IST) Dec 03
தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் உயிரைக் காப்பதில் அக்கறை காட்டாமல், விளம்பரங்களில் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
03:12 PM (IST) Dec 03