- Home
- Politics
- திமுகவிடம் சிக்கிய நயினாரின் குடுமி..! அடங்கிப்போக வைக்கும் 2 விஷயங்கள்..! சீக்ரட் உடைத்த திருச்சி சூர்யா..!
திமுகவிடம் சிக்கிய நயினாரின் குடுமி..! அடங்கிப்போக வைக்கும் 2 விஷயங்கள்..! சீக்ரட் உடைத்த திருச்சி சூர்யா..!
இரண்டு விஷயத்தையும் திமுக அரசு எடுத்து ஏதாவது செய்து விடுமோ என்கிற காரணத்தால் திமுக எதிர்ப்பு என்ற நிலையை மறந்து விட்டார் நயினார் நாகேந்திரன்.

‘‘நயினார் நாகேந்திரனின் முழு கவனமும் இப்போது அண்ணாமலை எதிர்ப்பில் மட்டுமே பயணிக்கிறதே தவிர, திமுக என்கிற எதிர்ப்பை மறந்து விட்டார்’’ என குற்றம்சாட்டியுள்ளார் திருச்சி சூர்யா.
திமுக சீனியரும், திருச்சி எம்.பி.,யுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. 2022-ஆம் ஆண்டு மே மாதம் பாஜகவில் இணைந்து, ஓபிச்நி அணியின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். ஆனால், சமூக வலைதளங்களில் கட்சி தலைமை, பிற தலைவர்கள் மீது விமர்சனங்கள், சர்ச்சைக்குரிய பதிவுகள் போன்றவற்றால் அவர் மீண்டும் மீண்டும் கட்சி சார்பில் ஒழுங்குநடவடிக்கை எதிர்கொண்டார். 2024- கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பாஜகவின் அடிப்படை உறுப்பினருட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் திமுக எதிர்ப்பு குறித்து பேசியுள்ள அவர், ‘‘திமுக அமைச்சர்கள் என்னை சீண்டிக்கொண்டே இருக்ககிறார்கள். என்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அமித்ஷாவிடம் சத்தியம் செய்து கொடுத்ததால் அமைதியாக இருக்கிறேன். எனக்கு ரெண்டு நிமிடம் ஆகாது எதிர்த்து பேசுவதற்கு. எனக்கும் காலம் வரும்’’ என்கிறார் அண்ணாமலை. அவர் முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்தவர். நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவிக்கு வந்த பிறகு திமுக எதிர்ப்பு என்கிற ஒரு லைனே கிடையாது. அண்ணாமலை இருந்தபோது திமுக மீது எந்த அளவுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்ததோ, நயினார் நாகேந்திரன் வந்ததற்கு பிறகு இல்லை.
எடப்பாடி பழனிச்சாமியுடனும், அதிமுகவுடனும் அந்த நெருக்கத்தை காட்ட வேண்டும் என்பதில்தான் அவரது கவனம் இருக்கிறதே தவிர, திமுக எதிர்ப்பு என்கிற மனநிலையை மறந்து விட்டார் நயினார் நாகேந்திரன். எடப்பாடி பழனிச்சாமி நாளைக்கு முதலமைச்சராக வரக்கூடிய சூழ்நிலையில், நயினார் நாகேந்திரன் தான் துணை முதலமைச்சர் என்கிற பார்வை வந்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ரேப்போவை பில்டப் செய்வதில் மட்டுமே அவரது பார்வை இருக்கிறது,
தவிர, தமிழக பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. முன்பு அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என பஜகவிற்குள்ளேயே குரல் கொடுத்த பலரும் இப்போது ‘அய்யய்யோ... அண்ணாமலையே பாஜக தலைவர் பதவியில் இருந்திருக்கலாமே’ என வெளிப்படையாக என்னிடமே பலபேர் பேசுகிறார்கள். நயினார் நாகேந்திரன் திமுகவை எதிர்க்காததற்கு காரணம் அவருக்கு இருக்கும் இரண்டே பிரச்சினைகள் தான்.
ஒன்று தேர்தல் சமயத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் மாட்டியது. அண்ட விவகாரம் திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் அவரது மகன் 100 ஏக்கர் கோயில் நிலத்தை அபகரித்து நிலமோசடி செய்த வழக்கு இருக்கிறது. இது இரண்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த இரண்டு விஷயத்தையும் திமுக அரசு எடுத்து ஏதாவது செய்து விடுமோ என்கிற காரணத்தால் திமுக எதிர்ப்பு என்ற நிலையை மறந்து விட்டார் நயினார் நாகேந்திரன்.
இவனுங்கல வெச்சிக்கிட்டு war room இவனுகள கொண்டாடுலனு வேற குறை சொல்றனுங்க.. பி பயல்வோ.. pic.twitter.com/Dh7YxfqY56
— டிரில்லிங் கொத்தனார் 🔫💥 (@RJN_Jaya) December 3, 2025
ஆகையால்தான் அவருடைய முழு கவனமும் அண்ணாமலை எதிர்ப்பில் மட்டுமே பயணிக்கிறதே தவிர, திமுக என்கிற எதிர்ப்பை மறந்து விட்டார்’’ என்கிறார் திருச்சி சூர்யா.
