- Home
- Astrology
- Viruchiga Rasi Palan Dec 04: விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும்.!
Viruchiga Rasi Palan Dec 04: விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும்.!
Dec 04 Viruchiga Rasi Palan : டிசம்பர் 04, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 04, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் பகவான் சூரியனுடன் விருச்சிக ராசியில் இருப்பதால் உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.
குழப்பங்கள் நீங்கி துணிச்சலான, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சந்திர பகவானின் நிலை காரணமாக பிறருக்காக அதிக நேரம் செலவிடுதல் அல்லது கூட்டாளிகளுடன் சுமுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்கள்.
நிதி நிலைமை:
குருவின் நிலை காரணமாக கூட்டு நிதி கடன் அல்லது காப்பீடு தொடர்பான விஷயங்களில் மறு ஆய்வு தேவைப்படலாம். செலவுகள் கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். நிதி நிலையை மேம்படுத்த புதிய வருமான வழிகளைத் தேட தூண்டப்படுவீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் துணையுடன் நல்லிணக்கம் கூடும். சந்திரனின் நிலை காரணமாக திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். உறவுகளில் உள்ள பழைய சிக்கல்கள் அல்லது சந்தேகங்களை வெளிப்படையாக பேசி தீர்க்க நல்ல நாளாகும். உங்கள் தனிப்பட்ட பேச்சு மதிப்பைப் பெறும்.
பரிகாரங்கள்:
வள்ளி சமேதராக இருக்கும் முருகப்பெருமானை வணங்குவது நல்லது. கோதுமை அல்லது துவரம் பருப்பை தானம் செய்வது உகந்தது. சிவபெருமான் அல்லது பார்வதி தேவியை வணங்குவது உறவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

