- Home
- Sports
- Sports Cricket
- மார்க்ரம் சூப்பர் சதம்.. இந்தியாவுக்கு எமனாக மாறிய சிஎஸ்கே வீரர்.. 359 ரன்களை சேஸ் செய்து SA வெற்றி!
மார்க்ரம் சூப்பர் சதம்.. இந்தியாவுக்கு எமனாக மாறிய சிஎஸ்கே வீரர்.. 359 ரன்களை சேஸ் செய்து SA வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 359 ரன்களை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. எய்டன் மார்க்ரம் அட்டகாசமான சதம் விளாசினார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, எய்டன் மார்க்ராமின் சூப்பர் சதத்தால் எளிதாக எட்டியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது.
கோலி, ருத்ராஜ் சதம்
ருத்ராஜ் கெய்க்வாட் தனது முதல் சதம் (83 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 105 ரன்கள்) விளாசினார். அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியுள்ள கிங் விராட் கோலி . 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 93 பந்தில் 102 ரன்கள் அடித்து அசத்தினார். கே.எல்.ராகுல் 43 பந்தில் 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 66 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளையும், பர்கர், லுங்கி இங்கிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
தென்னாப்பிரிக்கா வெற்றி
பின்பு இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தெனனாப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அட்டகாச சதம் விளாசிய எய்டர் மார்க்ரம் 98 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 110 ரன்கள் விளாசினார். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் டெவால்ட் பிரெவிஸ் அதிரடி அரை சதம் (34 பந்துகளில் 54 ரன்) அடித்தார். இதேபோல் மேத்யூ பிரீட்ஸ்கேவியும் அரை சதம் (64 பந்துகளில் 68 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதிக ரன்களை சேஸ் செய்து சாதனை
இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்த அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகும். இதேபோல் 2வது இன்னிங்சில் பனிப்பொழிவும் இருந்ததும் இந்திய அணிக்கு பெரும் பாதகமாக மாறி விட்டது.

