MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சபரீசனுக்கே விபூதியடித்த திமுக அமைச்சர்கள்..! பென் டீமுக்கு பணம் கொடுத்து தகிடு தத்தோம்..! ஏமாற்றப்படும் அறிவாலயம்..!

சபரீசனுக்கே விபூதியடித்த திமுக அமைச்சர்கள்..! பென் டீமுக்கு பணம் கொடுத்து தகிடு தத்தோம்..! ஏமாற்றப்படும் அறிவாலயம்..!

சாதகமான ரிப்போர்ட்களை உருவாக்க முனைந்தவர்கள் திமுக தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமையையே ஏமாற்ற முயற்சித்த அவர்கள் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதுதான் அறிவாலயத்தில் விவாதிக்கக் கூடிய ஹாட் டாபிக்

3 Min read
Thiraviya raj
Published : Dec 03 2025, 09:41 PM IST| Updated : Dec 04 2025, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவோடு சேர்ந்து சபரீசனின் பென் அமைப்பும் மிகத் தீரமாகக் களமிறங்கி விட்டது. தேர்தலுக்கு இருக்கும் சிறிய இடைவெளி காலத்திற்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியை பற்றிய சர்வே, டேட்டா அனலிஸ்ட், அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகள், திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? போன்ற பல்வேறு விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுப்பதுதான் பென் அமைப்பில் இருக்கக்கூடிய பீல்ட் டீமின் முக்கியமான வேலை.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பீல்ட் டீம் இயங்கி வருகிறது. அதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் களத்தில் என்ன நடக்கிறது? திமுகவுக்கு சாதகமாக என்ன நடக்கிறது? பாதகமாக என்ன நடக்கிறது? திமுக சட்டமன்ற உறுப்பினர் அங்கு எப்படி செயல்படுகிறார்? அவருக்கும், திமுக கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், இருக்கக்கூடிய இணக்கம் எப்படி உள்ளது?அவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் தொடர்பு எப்படி இருக்கிறது? அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அவர்களுக்கு சாதி செல்வாக்கு எப்படி இருக்கிறது? அவர்களுக்கு சொந்த செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்று பல்வேறு வகைகளில் அந்தந்த நேரத்தில் சர்வே எடுத்து அந்த ரிப்போர்ட்டை பென் அமைப்புக்கு கொடுக்க வேண்டியது இதுதான் அந்த ஃபீல்டு டீமின் வேலை.

25
Image Credit : Asianet News

இந்த ஃபீல்டீம் தான் பென் அமைப்பில் மிக முக்கியமானது. களத்தில் என்ன நடக்கிறது? என்பதை அப்படியே எடுத்து அந்த ரிப்போர்ட்டை எந்த பாரபட்சமும் இல்லாமல் கொடுப்பதுதான் அவர்கள் வேலை. ஏனென்றால் உளவுத்துறை கூட எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர், அமைச்சர்களால் ‘கவனிக்கப்படுவார்கள்’. ஆகையால் உளவுத்துறை ரிப்போர்ட்கூட அவர்களுக்கு சாதமாக மாறிவிடும். ஆனால்,ஃ பீல்ட் டீம் அதற்கு சாதகமாக மாறாது. அதை அப்படியே வேரடி மண்ணோடு பிடுங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இந்த நிலையில் நான் கடந்த சில தினங்களுக்கு முன்பு பென் அமைப்பில் முக்கியமான டீமாக இருந்த ஃபீல்டு டீமின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகவே இவர்களைப் பற்றி சில புகார்கள் வந்ததாகவும், இதனையடுத்து ஃபீல்டு டீமில் இருந்த அவர்கள் வேலையை பென் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பென் அலுவலகத்தின் ஒரு ஜூம் மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஃபீல்டு டீமில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள கேப்டன்களுக்கான ஜூம் மீட் அது. பென் அமைப்பின் முக்கியமான நிர்வாகிகளும் அந்த ஜூம் மீட்டில் இருந்துள்ளனர்.

Related Articles

Related image1
தீபம் ஏற்றும் விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் திடீர் 144 தடை உத்தரவு!
35
Image Credit : our own

அப்போது தொடர் புகார்களின் அடிப்படையில் ஃபீல்டு டீமின்  பொறுப்பாளர்கள் மீது உள் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த மீட்டிங்கை முடித்துள்ளனர். திமுக முக்கியஸ்தர்கள் இந்த ஃபீல்டு டீமை வைத்து தங்களுக்கு சாதகமான ரிப்போர்ட்டுகளை வரவழைக்க வேண்டும். அதை ரிப்போர்ட்டாக அவர்கள் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று வளைத்து தங்களுக்கு சாதகமான ரிப்போர்ட்டுகளை மேல் இடத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். அதில் சில அமைச்சர்களும் உண்டு என்பதுதான் பென் அமைப்பின் சபரீசனுக்கு கிடைத்த முக்கியமான தகவல் என்கிறார்கள்.

பென் அமைப்பில் இன்சைடர் என்று சொல்லக்கூடிய சோர்ஸ்கள் மூலம் இந்த ஃபீல்டு டீம் கொஞ்சம் கொஞ்சமாக கண்காணித்து வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த சபரீசன் கோபமடைந்து உடனடியாக இதுகுறித்து மணிகண்டனோடு ஆலோசித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான அந்த புகார் உண்மையா? என்பதை சில வாரங்களாக அமைதியாக கண்காணித்து, விசாரித்து அவற்றை உறுதிப்படுத்தி கொண்ட பிறகே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

45
Image Credit : x/DMK

இந்த ஃபீல்டு டீம் மூலமாக திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுக்கு சாதகமான ரிப்போர்ட்டுகளை மேலிடத்திற்கு அனுப்பி வைக்க காய் நகர்த்தி உள்ளார்கள். 

55
Image Credit : our own

சம்பந்தப்பட்ட ஃபீல்டு டீம் மீது சபரீசன் ஆக்சன் எடுத்து விட்டார். இப்போது அவர்கள் மூலமாக யார் யார் தங்களுக்கு சாதகமான ரிப்போர்ட்களை உருவாக்க முனைந்தார்களோ அவர்கள் திமுக தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமையையே ஏமாற்ற முயற்சித்த அவர்கள் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதுதான் அறிவாலயத்தில் டாப் லெவலில் விவாதிக்கக் கூடிய ஹாட் டாபிக்காக இருக்கிறது’’ என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
1,400 விமானங்களை ரத்து செய்த இண்டிகோ..! 30 நாட்களாக நெருக்கடி..! ஸ்தம்பிக்கும் இந்திய விமான சேவை..!
Recommended image2
சுஷ்மா ஸ்வராஜின் கணவர், முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல் மரணம்..! டெல்லியில் குவியும் பாஜக தலைவர்கள்..!
Recommended image3
தமிழக வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் 40 -50 லட்சம் பேர்..! உங்கள் பெயரை தெரிந்து கொள்வது எப்படி..?
Related Stories
Recommended image1
தீபம் ஏற்றும் விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் திடீர் 144 தடை உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved