- Home
- Politics
- பிரபலத்தை தூக்கியடித்த இபிஎஸ்..! விஜய் கட்சியில் இணைய ரசிகர்களுடன் ஆலோசனை..! தவெக தொண்டர்கள் குஷி..!
பிரபலத்தை தூக்கியடித்த இபிஎஸ்..! விஜய் கட்சியில் இணைய ரசிகர்களுடன் ஆலோசனை..! தவெக தொண்டர்கள் குஷி..!
அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிமுகவில் இருந்து எடப்பாடி ஐயா என்னைத் தூக்கிவிட்டார். இப்போது எனக்கு மன வேதனையாக இருக்கிறது. இப்போது நான் தவெகவில் சேரலாமா? என நீங்கள் கருத்து சொல்லுங்கள்.

‘வணக்கம்டா மாப்ள’ என்று தொடங்கி, தமிழ் சமூக வலைதளங்களில் வைரலான ஹாஸ்யமான வீடியோக்களுக்குப் பெயர் பெற்றவர் அருண்குமார். தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் 2020-2021 காலகட்டத்தில் பெரிய ரீச்சானவர். "வணக்கம்டா மாப்ள, தேனியிலிருந்து!" என்று தன்னை அறிமுகப்படுத்தி, அரசியல், சமூக விஷயங்கள், காமெடி ஸ்கிட்ஸை பேசும் அவரது ஸ்டைல், நெட்டிசன்களிடம் டிரெண்ட் ஆனது. இது அளவுக்கு அதிகமான பிரபலத்தைத் தந்ததுடன், 2021-ல் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'வணக்கம்டா மாப்ள' திரைப்படத்திற்கும் பெயர் சூட்ட இன்ஸ்பயரேஷனாக இருந்தது.
2020-ல் டிக்டாக் சமூகதளத்தில் ‘வணக்கம்டா மாப்ள" என்ற டயலாக் கொண்ட காமெடி வீடியோக்கள் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றது. செந்தில் பாலாஜி, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களை டார்கெட் செய்து பேசும் வீடியோக்கள் வைரலானது. விஜய் டிவியில் 'நீயா நானா' டாக் ஷோவில் ஆவேசமாகப் பேசி, அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி வைரலானார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி, விசிகவினர் அவரைத் தாக்கியதாக வீடியோ வெளியிட்டார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 2024-ல் செந்தில் பாலாஜியை விமர்சித்து, "என்ன தியாகம் பண்ணிட்டாரு?" என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘வணக்கம்டா மாப்ள.. அதிமுகவில் பல வருஷமாக வார்டு செயலாளராக இருந்தேன்யா. அம்மா காலத்தில் இருந்து என் தெருவில் நான் தான் வார்டு செயலாளர். எல்லா ஏழைகளுக்கும் என்னென்ன வேண்டுமோ அதைச் செய்தேன். அந்த வார்டில் இருந்து ஒரு ஓட்டுக்கூட மிஸ் ஆகாமல் ஓட்டை முழுவதும் எழுதிக் கொடுத்து ஓட்டு போட வைத்தது நான்தான். இன்னைக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்றால் எடப்பாடி ஐயா அடிமட்ட உறுப்பினர், வார்டு செயலாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு ஒரு சின்ன பையனை போட்டு இருக்கிறார்.
அவரோ, வேலை செய்து கொண்டிருந்த என்னை ‘இனிமேல் நீங்கள் வேலை செய்யக்கூடாது. இனிமேல் கட்சி வேலையை பார்க்காதீர்கள். உங்களை பொறுப்பில் இருந்து தூக்கி விட்டார்கள்’ என்று சொல்லி என்னைத் தடுக்கிறார். மனசு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இப்போது மக்களிடம் நான் என்ன கேட்கிறேன்... ஒரு பொறுப்பாளராக தவெகவில் நான் சேரவேண்டும். மக்களை கேட்க வேண்டும். நான் தவெகவில் வந்து நீங்கள் என்னை ஆதரிப்பீர்களா? என் வார்டு மக்கள் தவெகவில் இணைந்து வேலை செய் என்று சொல்கிறார்கள். நான் என் மகனுக்காகத்தான் தவெகவிற்கு ஆதரவு கொடுத்தேன். வீடியோக்களை வெளியிட்டேன்.ஏற்கனவே வீடியோவில் பார்த்திருப்பீர்கள்.
அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிமுகவில் இருந்து எடப்பாடி ஐயா என்னைத் தூக்கிவிட்டார். இப்போது எனக்கு மன வேதனையாக இருக்கிறது. இப்போது நான் தவெகவில் சேரலாமா? என நீங்கள் கருத்து சொல்லுங்கள். நான் சேரலாம் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் நான் ஒரு பொறுப்பில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேறு எந்த ஆசையும் எனக்கு இல்லை. நான் அதிமுகவில் இருந்து அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்த்தவன். அந்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும். சின்னமனூரில் 24 வது வார்டில் உள்ளவர்கள் ‘‘என்னப்பா அருண்.. நீ ஒருத்தன் தான் நல்லவனாக இருந்தாய். உங்களை தூக்கி விட்டார்களே..’’ என்று வருத்தப்படுகிறார்கள். உனக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று எங்கள் தெருவில் உள்ளவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் (ரசிகர்கள்) தெவெகவில் சேர்வதற்கு ஆதரவு கொடுங்கள். கமெண்ட் செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார் வணக்கம்டா மாப்ள அருண்.
