மது போதையில் வந்து கவிஞர் வாலி எழுதிய பாட்டு... மாஸ் ஹிட் அடித்த கதை தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வாலி, ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடலை குடி போதையில் எழுதி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Lyricist Vaali song secret
வாலிபக் கவிஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் வாலி. இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் தான். அந்நிறுவனத்திற்கு பாட்டெழுத வேண்டும் என்பது வாலியின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு பல வருடங்களாக வாலிக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் பொதுவாக ஏவிஎம் படங்கள் என்றாலே கண்ணதாசன் தான் பாட்டெழுதுவாராம். அதனால் வாலிக்கு சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் ஆனபோதிலும் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து ஒரு வாய்ப்பு கூட வராமல் இருந்திருக்கிறது.
ஏவிஎம் வாய்ப்புக்காக காத்திருந்த வாலி
ஒருநாள் எம்.எஸ்.விஸ்வநாதனின் ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்திற்காக காலையில் பாடல் எழுதிய வாலி, மதியம் என்ன படத்திற்கான ரெக்கார்டிங் என கேட்க, அவரோ ஏவிஎம் படத்தின் ரெக்கார்டிங் இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஏவிஎம் படம் என்றால் நமக்கு வேலை இருக்காது என எண்ணிய வாலி வீட்டிற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மதிய வேளையில் மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்திருக்கிறார். அப்போது எம்.எஸ்.வி-யின் ஸ்டூடியோவுக்கு சென்ற ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவரை சந்தித்து பேசி இருக்கிறார்.
வாலியின் பாடல்களை கேட்டு இம்பிரஸ் ஆன மெய்யப்ப செட்டியார்
அப்போது எதர்ச்சியாக அங்கு வாலி எழுதிய தெய்வத் தாய் பட பாடல்களை எல்லாம் கேட்டிருக்கிறார். அப்பாடல் வரிகளை கேட்டு வியப்படைந்த மெய்யப்ப செட்டியார் யார் எழுதிய பாடல்கள் இது என கேட்க, அதற்கு எம்.எஸ்.வி, இவை அனைத்தும் வாலி எழுதியது என கூறி இருக்கிறார். அவரை தன் படத்திலும் பாடல் எழுத வைக்க முடிவெடுத்த மெய்யப்ப செட்டியார், தனது தயாரிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம் திரைப்படத்திற்காக அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுவதால், அந்தப் பாடலை எழுத வாலியை அழைக்கலாம் என முடிவு செய்து, வாலியை வரச் சொல்லுமாறு தன் உதவியாளரிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
வாலி குடிபோதையில் எழுதிய பாடல்
பின்னர் வீட்டில் குடிபோதையில் இருந்த வாலியிடம் மெய்யப்ப செட்டியார் பாடல் எழுத அழைத்திருக்கும் விஷயத்தை அந்த நபர் சொன்னதும், திக்குமுக்காடிப் போன வாலி, உடனடியாக குளித்துவிட்டு, குடிபோதையிலேயே பாடல் எழுத சென்றிருக்கிறார். அப்போது வாலியிடம் எம்.எஸ்.வி சிச்சுவேஷன் சொல்ல, அந்த போதையிலும் அவர் எழுதிய அழகிய பாடல் தான், சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெற்ற ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற பாடல். இப்படி ஒரு கவித்துவமான பாடலை வாலி குடிபோதையில் தான் எழுதினார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்பாடல் காலம் கடந்து நிலைத்து நிற்க, அதன் பாடல் வரிகளும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

