- Home
- குற்றம்
- என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், அவரது கணவர் சிவசுப்பிரமணியன் கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பியோட்டம்.

திமுக வழக்கறிஞர் படுகொலை
தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி (46) பணியாற்றி வந்தார். இவர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சிவசுப்பிரமணியன் மனைவியை சுற்றி வளைத்த போலீஸ்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அவரை வெட்டியதாக கூறப்பட்ட நபர் சவகாசமாக நடந்து சென்று இருசக்கர வாகனத்தில் ஏறி சென்ற புகைப்படங்கள் வெளியாகின. புகைப்படங்களை வைத்து கொலையாளியை அடையாளம் கண்ட போலீசார் அவர் சொந்தமாக லாரி ஒன்றை வைத்து தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியம் என்பது தெரிய வந்தது. அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி கிடந்தது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என யாரும் அங்கு இல்லை. இதனையடுத்து செல்போன் நம்பரை வைத்து சிவசுப்பிரமணியன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் அவரது செல்போன் கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே அவரது செல்போனில் இருந்து ரயில் சென்றுக்கொண்டிருக்கும் அவரது மனைவியிடம் பேசி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் வைத்து சிவசுப்பிரமணியனின் மனைவியை சுற்றி வளைத்த போலீசார் அவரை தென்காசி அழைத்து வந்தனர்.
கள்ளக்காதல்
அவரிடம் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் கொலை குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகின. லாரி தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு வெளிமாநிலைக்கு சென்றால் ஒரு மாதம் வரை அங்கேயே தங்கியிருந்து மீண்டும் பாரம் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவரது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியன் மனைவிக்கு உதவியதாக கூறப்படுகிறது. அடிக்கடி அந்த சிறுமியை மருத்துவமனைக்கு தனது வாகனத்தை அழைத்துச் சென்றதால் முத்துக்குமாரசாமிக்கும் சிவசுப்பிரமணியனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது விவகாரம் சிவசுப்பிரமணியனுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்ததுடன் மகளின் சிகிச்சைக்காக குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முத்துக்குமாரசாமி ஓயாமல் டார்ச்சர்
அங்கு சிகிச்சையில் இருந்த மகள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசுப்பிரமணியன் குடும்பத்துடன் தென்காசி திரும்பியுள்ளார். இந்த நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி மீண்டும் சிவசுப்பிரமணியன் மனைவியை உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. மகளைப் பறிகொடுத்து விட்டு வந்திருக்கிறேன் எனது மகனும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறான், என்னை விட்டு விடுங்கள் என்று அவர் மறுத்துள்ளார். இருந்தாலும் விடாமல் முத்துக்குமாரசாமி டார்ச்சர் செய்ததாகவும் இது குறித்து தனது கணவர் சிவ சுப்ரமணியிடம் கூறி கதறி அழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
முதலில் தனது மனைவியின் சகோதரர் சதீஷை அழைத்து தனது மனைவி குழந்தைகளை பத்திரமாக சென்னைக்கு அழைத்துப் போ என்று கூறிவிட்டு கையில் அரிவாளுடன் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை தேடி சென்று அலுவலகத்தில் வெட்டி கொலை செய்து விட்டு பைக்கில் ஏறி கேரளாவுக்கு சென்றது சிவசுப்பிரமணியனின் மனைவி வாக்குமூலத்தில் தெரியவந்தது. இதனையடுத்து கேரளாவில் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யும் பணியில் தென்காசி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

