இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், கரூர், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:36 PM (IST) Oct 03
கரூர் அசம்பாவிதம் குறித்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
11:20 PM (IST) Sep 28
Asia Cup 2025: இந்திய ராணுவத்தை அவமதித்த ஹாரிஸ் ராஃப்புக்கு இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தரமான பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
09:48 PM (IST) Sep 28
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா இந்த இலக்கை துரத்தினால் எளிதாக ஆசிய கோப்பையை தட்டித் தூக்கி விடும்.
09:34 PM (IST) Sep 28
கரூர் சோக சம்பவத்தை தொடர்ந்து விஜய், சோகத்தில் உறைந்திருக்கும் நிலையில், அவரது வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:19 PM (IST) Sep 28
iPhone தள்ளுபடியில் iPhone வாங்கியவர்கள், அது ஒரிஜினலா அல்லது போலியா என அறிய 4 எளிய முறைகள் (IMEI, OS, Apple இணையதளம் மற்றும் வடிவமைப்பு) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
09:11 PM (IST) Sep 28
eSIM Airtel, Jio, Vi, BSNL பயனர்கள் தங்கள் eSIM-ஐ ஆக்டிவேட் செய்வதற்கான முழுமையான வழிகாட்டி. QR குறியீடு பெறுவது முதல் பாதுகாப்பு அம்சங்கள் வரை!
09:06 PM (IST) Sep 28
கரூர் பெருந்துயரத்துக்கு பிறகு விஜய் சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் மனமுடைந்து போய் இருப்பதாக அவரது ரசிகர்கள், தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
09:03 PM (IST) Sep 28
Apple கூகுள் Gemini-க்கு சவால் விட, Apple தனது Siri-ஐ ChatGPT போன்ற AI மூலம் மாற்றுகிறது. சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த புதிய Siri iPhone 18 உடன் வரலாம்.
08:59 PM (IST) Sep 28
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:56 PM (IST) Sep 28
Job Elimination அடுத்த 2-3 ஆண்டுகளில் AI அனைத்துத் துறைகளிலும் வேலையை நீக்கும் என Walmart CEO டக் மெக்மில்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்க வலியுறுத்தல்.
08:48 PM (IST) Sep 28
Salem Steel Plant சேலம் உருக்காலையில் (SAIL) அசிஸ்டன்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் இன்ஜினியரிங் அசோசியேட் பணிகளுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ. 1,80,000/− வரை.
08:39 PM (IST) Sep 28
iPhone 17 புதிய iPhone 17, iPhone 16-ஐ விட குறைவான விலையில் கிடைக்கிறது. வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் வாங்குபவர்களுக்கு இது ஒரு இலாபகரமான ஒப்பந்தம்.
08:30 PM (IST) Sep 28
ArcaneDoor எனப்படும் Zero-Day பாதுகாப்புப் பிழைகளை உடனடியாகச் சரிசெய்ய அமெரிக்காவின் CISA மத்திய ஏஜென்சிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குச் சீனத் தொடர்பு இருக்கலாம்.
08:27 PM (IST) Sep 28
தவெக தலைவர் பிரசாரம் செய்த கரூர் வேலுசாமிபுரம் விசாலமான இடம் என்று காவல்துறை விளக்கம் அளித்திருந்த நிலையில், அந்த இடம் குறுகிய சந்து என செந்தில் பாலாஜி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
08:19 PM (IST) Sep 28
CSIR UGC NET JRF மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேவையான CSIR UGC NET டிசம்பர் 2025 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.
08:07 PM (IST) Sep 28
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணம் மூச்சுத்திணறல் என மருத்துவக் கல்வி இயக்குநர் ராஜகுமாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
07:41 PM (IST) Sep 28
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் நிலையில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
07:31 PM (IST) Sep 28
காசா நகரில் 140 ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. நேர்மறையான அணுகுமுறைக்குத் தயாராக இருப்பதாககவும் கூறியுள்ளது.
07:15 PM (IST) Sep 28
இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
06:48 PM (IST) Sep 28
ஆளுங்கட்சியான திமுக கூட்டத்துக்கே காவல்துறையினர் நிபந்தனைகள் போடுகின்றனர் என்று கனிமொழி தெரிவித்தார். மேலும் கரூர் கூட்டத்தில் திமுக சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
06:34 PM (IST) Sep 28
கரூரில் நடந்த கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, வார இறுதியில் பிரசாரம் செய்வதை அண்ணாமலை விமர்சித்துள்ளார். விஜய் தனது பிரசார பயணத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
06:05 PM (IST) Sep 28
director Bharathiraja who lost consciousness : பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், அவர் சுயநினைவை இழந்து வருவதாகவும் அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
05:54 PM (IST) Sep 28
கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அண்ணாமலை, இந்தத் துயரத்திற்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமுமே காரணம் என குற்றம் சாட்டினார். ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
05:44 PM (IST) Sep 28
பிசிசிஐ தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா நீடிக்கிறார். யார் இந்த மிதுன் மன்ஹாஸ் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
05:42 PM (IST) Sep 28
விஜய் கரூர் மாவட்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
05:27 PM (IST) Sep 28
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
05:08 PM (IST) Sep 28
This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:02 PM (IST) Sep 28
கரூர் சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு இனிமேலும் இப்படியொரு சம்பவம் நடைபெறாமலிருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
05:00 PM (IST) Sep 28
இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு கிடைக்கும்? ரிசர்வ் டே எனப்படும் மாற்று நாள் உண்டா? என்பது குறித்து பார்ப்போம்.
04:49 PM (IST) Sep 28
This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:34 PM (IST) Sep 28
கரூர் மாவட்டத்தில் நடந்த விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை 29ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக வணிகர் சங்க பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
04:33 PM (IST) Sep 28
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, கரூரில் நடந்த விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும் காவல்துறையுமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். குறுகிய இடத்தை ஒதுக்கியது சம்பவத்துக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
04:23 PM (IST) Sep 28
This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:16 PM (IST) Sep 28
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலுக்கு மின் தடையும் ஒரு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
04:15 PM (IST) Sep 28
கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் விளக்கம் அளித்துள்ளார். போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், கல்வீச்சு மற்றும் மின்வெட்டு நடக்கவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
04:11 PM (IST) Sep 28
This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:03 PM (IST) Sep 28
கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒரு உறுதியான முறை ஏன் அங்கு உருவாக்கப்படவில்லை? பொறுப்பை நிர்ணயிப்பதற்கு பதிலாக, அரசு அமைப்பு இழப்பீடு வழங்குவதன் மூலம் விஷயத்தை மூடி முடித்துவிட்டதாகக் கருதுகிறது.
03:50 PM (IST) Sep 28
கரூரில் தவெக தலைவர் விஜய், செந்தில் பாலாஜியை விமர்சித்துப் பாடியதே அசம்பவாதங்கள் நடக்கக் காரணம் என அதிமுகவின் கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாதுகாப்பு வழங்குவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
03:40 PM (IST) Sep 28
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வால்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
03:31 PM (IST) Sep 28
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள், பிரபலங்களின் சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன.