கரூர் சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு இனிமேலும் இப்படியொரு சம்பவம் நடைபெறாமலிருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கரூர் சம்பவம் - நடிகர் கார்த்தி இரங்கல்

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நாடு முழுவதும் மக்களை சந்தித்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதி விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட மக்களை சந்தித்து பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் தனது பரப்புரையை முடித்த கையோடு கரூர் சென்றிருந்தார். அப்போது, அங்கு மின்சாரம் தடைபட்டது. கடுமையான கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40ஆக அதிகரித்துள்ளது.

Karur Rally Stampede : நாளை 29ஆம் தேதி கடைகள் அடைப்பு - வணிகர் சங்க பேரவை அறிவிப்பு

மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி நிதியுதவியும் அளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும் நிதியுதவி அறிவித்தார்.

Scroll to load tweet…

இவரைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் தளபதி விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார். இவ்வளவு ஏன், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விஜய் கூட்டத்தில் 39 மரணங்களுக்கு யார் பொறுப்பு..? இழப்பீட்டை அறிவித்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறதா திமுக அரசு..?

இந்த நிலையில் தான் நடிகர் கார்த்தி கரூர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.