கரூர் மாவட்டத்தில் நடந்த விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை 29ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக வணிகர் சங்க பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் - கரூர் கூட்ட நெரிசல்

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் நாடு முழுவதும் மக்களை சந்தித்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி மாவட்ட வாரியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40ஆக அதிகரித்துள்ளது.

கரூர் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு.! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு

மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி நிதியுதவியும் அளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும் நிதியுதவி அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழககத்தில் தலைவர் தளபதி விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார். இவ்வளவு ஏன், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விஜய் மீது ஆக்சன் எடுங்க.. இனி பிரசாரமே பண்ணக் கூடாது.. கொதித்தெழுந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்!

இந்த நிலையில் தான் கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை செப்டம்பர் 29ஆம் தேதி ஒருநாள் மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக வணிகர் சங்க பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றும் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மெடிக்கல் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் திருந்திக்கோ..! திருந்தி விடு.. சே… MGR பாட்டைச் சொல்லி சத்யராஜ் ஆவேசம்!