கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த விஜயின் பிரசாரத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விஜயை ஆவேகமாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறிவருகின்றனர். இந்நிலையில், இந்த அசம்பாவிதத்திற்கு முழுப்பொறுப்பும் தா.வெ.கா தலைவர் விஜய் ஏற்கவேண்டும் என்றும் அவர் கைது செய்யப்படவேண்டும் என மக்கள் கொந்தளிப்புடன் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் கரூரில் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளைப்பாடி விஜயை ஆவேகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். தவறு என்பது தவறிச்செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும். சிந்தித்துப்பார்த்து செய்கையை மாத்து, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தெரிஞ்சு தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராமா பார்த்துக்கோ. ச்சே!”, என அதில் கூறியுள்ளார்.

இந்த அசம்பாவித்த்திற்கு முழு பொறுப்பு த.வெ.கா தலைவர் விஜய் ஏற்க வேண்டும் என பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தான் முழுபாதுகாப்பு வழங்க வேண்டும் என சிலர் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பலரும் பல விதங்களின் கருத்து கூறும் நிலையில், நடிகர் விஜயின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தா.வெ.கா தொண்டர்கள் இது எதிர்க்கட்சிகளின் சதி என்றும் மக்கள் மத்தியில் உள்ள விஜயின் செல்வாக்கை சரிக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.