- Home
- Cinema
- விஜயை விட 100 மடங்கு சிறந்தவர்.. தலைவர் ஒரு தங்கம்.. கையெடுத்து கும்பிடும் ரஜினி, அஜித் ரசிகர்கள்.!
விஜயை விட 100 மடங்கு சிறந்தவர்.. தலைவர் ஒரு தங்கம்.. கையெடுத்து கும்பிடும் ரஜினி, அஜித் ரசிகர்கள்.!
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள், பிரபலங்களின் சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன.

ரஜினி, அஜித் ரசிகர்கள்
கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்று நினைத்து வந்திருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ள பதிவில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக கடும் விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சில பதிவுகளை வெளியிட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள். ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு நான் வரவில்லை என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை தான் அது. அந்த அறிக்கையில், “நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களை கூடி, பிரச்சாரத்துக்கு சென்று ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். என் உயிர் போனாலும் பரவாயில்லை. என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டாகும் ரசிகர்களின் பதிவுகள்
அதுபோல மற்றொரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு ரசிகரும் முக்கியம் அவர்கள் நலன் முக்கியம் என்று சொன்ன தலைவர் ரஜினி. தலைவர் ஒரு தங்கம்” என்றும் பதிவிட்டுள்ளார். இதுவொரு பக்கமிருக்க மற்றொரு பக்கத்தில் அஜித் ரசிகர்களும் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அஜித் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஜயை விட 100 மடங்கு சிறந்தவர் நடிகர் அஜித். இதுவரை எந்த ஒரு தருவாயிலும் இவர் ரசிக போதையை தனிமனித துதிபாடுதலை ஊக்குவித்தது இல்லை. கூட்டத்தை கூட்ட சொன்னதில்லை. குடும்பத்தை விட சொன்னதில்லை. இசை வெளியீட்டு விழா என்கிற பேரில் இம்சை பேச்சுகள் பேசியதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
அஜித் குமார்
மற்றொரு அஜித் ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாடியே உணர்ந்து தான் அந்தாளு எல்லா விஷயத்துலையும் ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது, சில விஷயங்கள பண்ணும்போது அது கடுப்பா இருந்தாலும் அந்தாளு வரப்போற பிரச்சனைகள உணராமல் எதுவுமே செய்யுறது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினி, அஜித் ரசிகர்கள் வெளியிடும் இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது. கரூர் சம்பவம், பிரபலங்களின் சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் நலனும் பாதுகாப்பும் அரசியல், பொது நிகழ்ச்சிகளில் இருக்க வேண்டும் என்பதை கரூர் துயர சம்பவம் நினைவூட்டுகிறது.