MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுயநினைவை இழந்த பாரதிராஜா - கண்ணீருடன் கேட்ட மன்னிப்பு! சகோதரர் பகிர்ந்த ஷாக் தகவல்!

சுயநினைவை இழந்த பாரதிராஜா - கண்ணீருடன் கேட்ட மன்னிப்பு! சகோதரர் பகிர்ந்த ஷாக் தகவல்!

director Bharathiraja who lost consciousness : பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், அவர் சுயநினைவை இழந்து வருவதாகவும் அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 28 2025, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
லெஜெண்ட் நடிகர்களை இயக்கிய இயக்குனர்:
Image Credit : x/offBharathiraja

லெஜெண்ட் நடிகர்களை இயக்கிய இயக்குனர்:

கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை நேர்த்தியாக இயக்கி பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் இமையம் பாரதிராஜா. ரஜினி, கமல், போன்ற பல நடிகர்களுக்கு ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரி அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று லெஜெண்ட் நடிகர்களை வைத்து இயக்கிய பெருமையும் இவரையே சேரும். இந்நிலையில் இவருடைய தற்போதைய நிலை குறித்து, பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் சில உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

கதறி அழும் குடும்பத்தினருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் - Karur Stampede குறித்து பிரபங்கள் கருத்து!

27
மனோஜ் பாரதிராஜா:
Image Credit : x/offBharathiraja

மனோஜ் பாரதிராஜா:

தன்னுடைய தந்தை பாரதி ராஜா போலவே, சினிமாவில் ஒரு இயக்குனராக மாறவேண்டும் என ஆசைப்பட்டவர் தான் மனோஜ் பாரதிராஜா. ஆனால் தன்னுடைய தந்தையின் ஆசைக்காக தன்னுடைய கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தாஜ் மஹால்' படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.

கரூர் விஜய் கூட்டத்தில் திட்டமிட்டு மின் தடையா? நடந்தது என்ன? மின்சார வாரியம் விளக்கம்!

37
நிறைவேறிய இயக்குனர் கனவு:
Image Credit : x/offBharathiraja

நிறைவேறிய இயக்குனர் கனவு:

இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. அதே போல் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்த படத்தின் கதைக்களத்துக்கே உயிர் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இந்த படத்தை தொடர்ந்து, ’கடல் பூக்​கள்’, ’வருஷமெல்​லாம் வசந்​தம்’, ’அல்லி அர்​ஜு​னா’, ’ஈரநிலம்’, ’சமுத்​திரம்’, ’அன்​னக்​கொடி’, போன்ற பல படங்களில் நடித்தார். அதே போல் 'மார்கழி திங்கள்' என்கிற படத்தையும் இயக்கி இருந்தார்.

47
மனோஜ் பாரதிராஜா மரணம்:
Image Credit : Twitter

மனோஜ் பாரதிராஜா மரணம்:

மனோஜ் பாரதிராஜாவுக்கு ஏற்கனவே இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இழப்பு அவரின் குடும்பத்தினரை மட்டும் அல்ல தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

57
தினமும் கண்ணீர் விடும் பாரதிராஜா:
Image Credit : our own

தினமும் கண்ணீர் விடும் பாரதிராஜா:

தற்போது வரை மனோஜ் இழப்பில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வரவில்லை. குறிப்பாக தன்னுடைய ஒரே மகனை இழந்து பாரதிராஜா தினமும் கண்ணீர் விட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் இன்றி இருக்கும் பாரதி ராஜா இந்த துயர சம்பவத்தில் இருந்து வெளியே வர... மலேசியா சென்றார். அங்கு இவரை அவரின் மகள் தான் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.

67
பாரதிராஜாவின் தற்போதைய நிலை:
Image Credit : our own

பாரதிராஜாவின் தற்போதைய நிலை:

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாரதி ராஜாவின் சமீபத்திய நிலை குறித்து அவரின் சகோதரர் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல் தான் ரசிகர்களை அதிரவைத்துள்ளது. அதாவது பாரதி ராஜா தன்னுடைய மகன் நினைவில் எப்போதும் கண்ணீர் வடித்து வருவதாகவும், கடந்த 3 வருடங்களாகவே உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் அவர், மனவேதனையால் இன்னும் சோர்ந்துவிட்டார். அவரின் உடல் நிலை மற்றும் மகன் பற்றிய நினைவுகள் வரக்கூடாது என்பதற்காகவே, திரைப்பட துறையை சேர்ந்த யாரையும் நாங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. மகனின் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.

77
பாரதி ராஜாவுக்கு இப்படி ஒரு நிலையா?
Image Credit : our own

பாரதி ராஜாவுக்கு இப்படி ஒரு நிலையா?

அதே போல் ஒரு முறை என் கையை பிடித்து கொண்டு, உன்னை நான் என்னுடைய படங்களில் 10 - 15 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று நீயும் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பாய். அதை செய்ய தவறிவிட்டேன்... என்னை மன்னித்துவிடு என கைகளை பற்றி கொண்டு அழுதார் என... கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இவர் கூறிய தகவலை தொடர்ந்து, பாரதி ராஜாவுக்கா இப்படி ஒரு நிலை என ஆதங்கமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதிராஜா
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved