கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கரூரில் தவெக விஜய் பிரச்சாரத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழக அரசு இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
ஒருநபர் விசாரணை ஆணையம்
அதன்படி, இன்று கரூர் மாவட்டத்திற்கு விரைந்த நீதிபதி அருணா ஜெகதீசன், விஜய் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த ஆய்வு, சம்பவத்தின்போது நிலவிய சூழல், இடத்தின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைபாடுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை ஆணையம் தனது அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
