ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் நிலையில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த ஹர்திக் பான்ட்யா பைனலில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி முதலில் பவுலிங்
இதேபோல் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல் டாஸ் போட்டு முடித்தவுடன் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்திய அணி பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் அகா (கேப்டன்) ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
