- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? துபாய் பிட்ச் ரிப்போர்ட் இதோ!
ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? துபாய் பிட்ச் ரிப்போர்ட் இதோ!
India vs Pakistan Asia Cup Final 2025: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதும் நிலையில், இந்த போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்? துபாய் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம்.

ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் பைனல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இரு போட்டிகளிலும் லீக் சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் ஃபோர் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானை மூன்றாவது முறையாக வீழ்த்தி இந்தியா கோப்பையை வெல்ல ரெடியாக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பைனல் எப்போது தொடங்கும்?
இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 28) ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. டாஸ் (Toss) இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போடப்படும்.
போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) சேனல்களில் நேரடியாகக் காணலாம். மேலும், சோனி லிவ் (SonyLiv) தளத்திலும் இந்தப் போட்டியை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.
துபாய் பிட்ச் ரிப்போர்ட் எப்படி?
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாகச் சற்று மந்தமாகவே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதற்குச் சிரமப்பட்டனர். ஆனால், வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் நிலைமை மாறியது. அந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 400 ரன்களுக்கும் மேல் எடுத்தன.
இறுதிப் போட்டிக்கும் இதே போன்ற ஆடுகளத்தை எதிர்பார்க்கலாம். இதனால் இரு அணியின் அதிரடி ஆட்டக்காரர்களும் இந்தப் பிட்ச்சில் ரன்களைக் குவிக்க வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவுக்குச் சாதகமாக இருந்தது. அது இன்றும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
இரு அணி வீரர்கள் விவரம்
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆஹா (கேப்டன்), அப்ரார் அஹமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சயிம் அயூப், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் மொகிம்.