This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நம்பிக்கை, பொறுப்பு மற்றும் தொடர்புகள் நிறைந்த வாரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை அடைவதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் நிதி திட்டமிடல் மற்றும் கடமைகள் மீது உங்கள் கவனம் மாறும். வார இறுதியில் புதிய யோசனைகளில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க முன் சிந்திப்பது அவசியம்.
ஆரோக்கியம்:
உடற்பயிற்சி செய்யும் பொழுது மிதமான அணுகுமுறை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது உழைப்பை தவிர்க்கவும். இந்த வாரம் உங்கள் உடல் நிலைத் தன்மையுடன் விளங்கும். உணவு மற்றும் உடற்பயிற்சியில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது. அதிகப்படியான சிந்தனையால் மன சோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகமாக சிந்திப்பதை தவிர்த்து விட்டு தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுங்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவை. வரவு, செலவு ஆகியவற்றை திட்டமிடுங்கள். தனிப்பட்ட வளர்ச்சி அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கான முதலீடுகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். பண விஷயங்களில் அலட்சியம் கொள்வதை தவிர்க்கவும். முதலீடுகள் செய்வதற்கு முன்பு கூடுதல் கவனம் தேவை. பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு உகந்த வாரமாக இருக்கும். கற்கும் ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகமாக காணப்படும். கடினமான பாடங்களில் கவனம் செலுத்தி தேர்வுகளுக்கு தயாராக சிறந்த நேரம் ஆகும். மாணவர்களின் ஒழுக்கம் மேம்படும். குழுவாக படிப்பது விரைவான கற்றலுக்கு உதவும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
இன்று வேலை மற்றும் தொழில் ரீதியாக நிலையான முன்னேற்றம் காணப்படும். வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியும் வெற்றியைத் தரும். புதிய பொறுப்புகள் தேடி வரலாம் உங்கள் பேச்சுத் திறன், முடிவெடுக்கும் திறன் மேம்படும். இது உங்கள் தொழில் விஷயங்களில் சாதகமாக அமையும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கலாம். எதிரிகளிடமிருந்து எச்சரிக்கை தேவை.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் வலுவான மற்றும் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கான நிதிப் பொறுப்புகள் அல்லது தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் நெருங்கிய உணர்வுகளுடன் தொடர்பு அல்லது பயணங்கள் மூலம் பிணைப்பு வலுப்படும். கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதற்கு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்:
- வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுங்கள்.
- குருபகவானுக்கு உகந்த கொண்டைக்கடலை மாலை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
- விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது குடும்ப அமைதியையும், ஸ்திரத்தன்மையும் மேம்படுத்தும்.
- முதியவர்கள் ஏழை எளியவர்களின் மருத்துவ செலவுக்கு உதவுங்கள். மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
