This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசிய நேயர்களே இந்த வாரம் உங்கள் கடின உழைப்புக்கான நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிலுவையில் இருந்த பணிகள் சிறப்பாக முடிவடையும். உங்கள் செயல்திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாரத்தின் தொடக்கம் உங்கள் இலக்குகளை திட்டமிட்டு முடிப்பதற்கு சரியான நேரம் ஆகும். வார இறுதியில் குடும்பம் மற்றும் வீட்டுப் பொறுப்புகளின் மீது அதிக கவனம் தேவைப்படும்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு இந்த வாரம் உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதிக வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மன அழுத்தத்தை குறைக்க யோகா மற்றும் தியானம் செய்வது அவசியம். வாரத் தொடக்கத்தில் ஆற்றல் சிறப்பாக இருந்தாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம். தினசரி நடைப் பயிற்சி செய்வது, உடல் சமநிலையை பேணுவதற்கு உதவும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி நிலைமை ஸ்திரமாக இருக்கும். புதிய நிதி ஆதாரத்திற்கான கதவுகள் திறக்கும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்துவீர்கள். இது புதிய நிதி ஆதாயங்களைத் தரும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவு அல்லது ஆச்சரியமான பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிக ஆபத்துள்ள முதலீடுகளை தவிர்க்கவும்.
கல்வி:
விருச்சிக ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலைக் குறையும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கற்றல் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இது தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்தி படிக்கும் பொழுது நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆழமான ஆய்வு மற்றும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிப்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
வேலை:
இந்த வாரம் விரும்பிய பணி மாற்றம், இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் பகுப்பாய்வு திறன் கொண்டு சவாலான காரியத்தை முடிப்பீர்கள். இது அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். புதிய வேலை வாய்ப்புகளை தேடுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வாரத்தின் தொடக்கத்தில் வணிகம் மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழில் கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு சரியான நேரம். அதே சமயம் ஆபத்தான அபாயகரமான நடவடிக்கைகளை தவிர்க்கவும். அரசு டெண்டர்கள் விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இந்த வாரம் இணக்கமான சூழல் நிலவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் சாதகமான முடிவைப் பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் கூடும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் இணக்கமான உறவை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாரமாகும்.
பரிகாரம்:
- செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது அல்லது கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது குடும்ப கஷ்டங்கள் மற்றும் பிணிகளை நீக்க உதவும்.
- சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றுவது நல்லது.
- ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குதல், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குதல் ஆகியவை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
