- Home
- Astrology
- Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்-செவ்வாய்.! 4 ராசிகளுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்.!
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்-செவ்வாய்.! 4 ராசிகளுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்.!
Sun mars conjunction in libra: 18 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் சூரியன் இருவரும் துலாம் ராசியில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரியன் செவ்வாய் சேர்க்கை
ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றுகின்றன. அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் பொழுது பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதம் சூரிய பகவான் துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். துலாம் ராசியில் ஏற்கனவே செவ்வாய் பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு 4 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தரவுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை கடக ராசியின் நான்காவது வீட்டில் நிகழவுள்ளது. இதன் காரணமாக தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பீர்கள். நிதிநிலைமை மேம்படும். பணத்தை சேமிப்பதில் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து, ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் லக்ன ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுடனான நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும். நீங்கள் செய்துவரும் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தனுசு
சூரியன் செவ்வாய் சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த ராசியின் 11 வது வீட்டில் இரு சுப கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக உங்களின் பழைய கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன அமைதி கிடைக்கும். வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும். பொன், பொருள், சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புகள் உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை பல நன்மைகளைத் தரவுள்ளது. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவடையும். ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். தீபாவளிக்குப் பிறகு புதிய திட்டங்களை தொடங்கலாம். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். சிறிய தொழில் செய்து பருபவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)