- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கோபப்படுவாங்க.! யாராவது தப்பு செஞ்சா கண்ணாலேயே எரிச்சிடுவாங்க.!
Astrology: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கோபப்படுவாங்க.! யாராவது தப்பு செஞ்சா கண்ணாலேயே எரிச்சிடுவாங்க.!
4 zodiac signs that get angry the most: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் பொறுமை இல்லாதவர்களாகவும், அதிக கோபப்படுபவர்களாகவும் விவரிக்கப்படுகின்றனர். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக கோபப்படும் 4 ராசிகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. அந்த வகையில் சில ராசிக்காரர்கள் பொறுமை குறைவாகவும், அதிக கோபப்படும் குணம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். இது கிரகங்களின் அமைப்பு, சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்து மாறுபடலாம். இருப்பினும் அதிகமாக கோபம் கொள்ளும் நான்கு ராசிக்காரர்கள் பற்றியும், அவர்களின் கோபத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் என்பது ஆற்றல், உணர்ச்சி மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமாகும். மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு பொறுமை என்பது மிகக் குறைவாக இருக்கும்.
தங்கள் இலக்குகளுக்கு இடையூறு ஏற்படும் பொழுது அல்லது தங்கள் கருத்துக்கள் மதிக்கப்படாத பொழுது அவர்கள் கோபம் கொள்கிறார்கள். தங்கள் சுதந்திரத்தில் யாரேனும் தலையிட்டாலோ, யாராவது அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தாலோ அல்லது அவர்களின் முடிவுகளை கேள்வி கேட்டாலோ அவர்களுக்கு கோபம் உச்சத்தை அடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியையும் செவ்வாய் கிரகமே ஆள்கிறது. இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆழமான உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான குணத்தை அளிக்கிறது. விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள் மற்றும் தங்கள் உறவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ, துரோகம் செய்வது, மோசடியில் ஈடுபடுவது அல்லது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது போன்றவை விருச்சிக ராசிக்காரர்களை கோபப்படுத்தும்.
அவர்களின் கோபம் பொதுவாக அமைதியாக, அதேசமயம் தீவிரமான வடிவத்தில் வெளிப்படும். அவர்கள் மனதில் பழிவாங்கும் எண்ணத்தை வைத்திருப்பார்கள். ஆனால் அதை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் பெருமை, தலைமை மற்றும் கவனத்தை ஈர்க்கும் குணங்களை பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் மரியாதை குறைவாக நடத்தப்படும் பொழுது, தங்கள் திறமைகள்/முயற்சிகள் அங்கீகரிக்கப்படாத பொழுது அல்லது யாரேனும் தங்களை புறக்கணிக்கும் பொழுது அதிக கோபம் கொள்கின்றனர்.
அவர்கள் அனைத்து விஷயங்களிலும் மையமாக இருக்க விரும்புவதால் இதற்கு எதிரான எந்த ஒரு செயலும் அவர்களை எளிதில் கோபமடையச் செய்து விடும். அவர்களின் கோபம் பொதுவாக வெளிப்படையாக இருக்கும். தங்கள் கோபத்தை குரலை உயர்த்தியோ அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையிலோ வெளிப்படுத்துவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம், நேர்மை ஆகியவற்றை விரும்புபவர்கள். இவர்கள் இயல்பாகவே நம்பிக்கையானவர்கள். ஒரு குறுகிய வளையத்திற்குள் இருக்க விரும்பாதவர்கள். தங்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொழுது அல்லது அவர்களின் நேர்மையான கருத்துக்கள் புறக்கணிக்கும் பொழுது தனுசு ராசிக்காரர்கள் கோபப்படுவார்கள்.
அவர்களை பொய்யாகவோ அல்லது முட்டாளாகவோ உணர வைக்கும் சூழ்நிலைகளும் அவர்களை எரிச்சல் அடையச் செய்து விடும். இவர்கள் பொதுவாக தங்களது கோபத்தை நேரடியாக வெளிப்படுத்தி விடுவார்கள். இவர்கள் வார்த்தைகள் மிகவும் கூர்மையாக இருக்கும். தங்கள் கோபத்தை வெளிப்படையாக கூறிவிட்டு அதை விரைவில் மறந்து விடுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)