- Home
- Astrology
- Guru Peyarchi 2025: 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச ராசிக்கு செல்லும் குரு பகவான்.! சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்!
Guru Peyarchi 2025: 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச ராசிக்கு செல்லும் குரு பகவான்.! சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்!
Guru Peyarchi 2025: அக்டோபர் மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து வெளியேறி உச்ச ராசியான கடக ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் குரு பகவான் முக்கியத்துவம் வாய்ந்தவராக அறியப்படுகிறார். இவர் அறிவு, குழந்தைகள், திருமணம், செல்வம், கல்வி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் வரை பயணிக்கிறார். இதன் விளைவாக மீண்டும் அதே ராசியை அடைவதற்கு அவருக்கு 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் வேகமாக நகர்ந்து அவர் மூன்று ராசிகளில் சஞ்சரிக்கிறார்.
கடக ராசிக்கு செல்லும் குரு பகவான்
மே 15, 2025 ரிஷப ராசியில் இருந்து வெளியேறி மிதுன ராசிக்குள் நுழைந்தார். அக்டோபர் 19, 2025 மதியம் 12:57 மணிக்கு மிதுன ராசியை விட்டு வெளியேறி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். ஆனால் இந்த ராசியில் குரு நீண்ட நாட்கள் தங்க மாட்டார். நவம்பர் 11, 2025 கடக ராசியில் வக்ர நிலையை அடைந்து டிசம்பர் 4, 2025 அன்று மீண்டும் மிதுன ராசிக்கு திரும்ப இருக்கிறார். குரு தனது உச்ச ராசிக்கு வருவது 4 ராசிகளின் வாழ்க்கையும் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. அந்த ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1.மேஷம்
குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைவது மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தரும். மேஷ ராசியின் நான்காவது வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள், தங்கம் சேரும். நிலம் விற்பனை அல்லது ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இத்தனை நாட்களாக மனதை வாட்டி வதைத்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினரிடையே அமைதியும், நல்லிணக்கமும் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
2.மிதுனம்
மிதுன ராசியில் குரு இரண்டாவது வீட்டிற்கு செல்ல இருக்கிறார். மிதுன ராசியின் கர்ம ஜென்ம அதிபதியாகவும், ஏழாவது வீட்டின் அதிபதியாகவும் இருக்கும் குரு பகவான் இரண்டாவது வீட்டில் நுழையும் பொழுது அவர்கள் மிதுன ராசியினர் பலன்களை அடைய உள்ளனர். குறிப்பாக பணியிடத்தில் அவர்கள் சிறப்பு பலன்களைப் பெறுவார்கள். தொழில், வணிகம் செய்து வருபவர்கள் அரசு ஒப்பந்தங்களை பெறும் வாய்ப்பு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் எந்தவிதமான நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.
3.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியானது நிதி பலத்தை அளிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயத்திற்கான புதிய வழிகளை காண்பீர்கள். இது நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும். மக்கள் உங்கள் ஆளுமையால் ஈர்க்கப்படுவார்கள். பணிபுரிபவர்கள் நேர்மறையான சூழலைக் காண்பீர்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் கொடுத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
புதிய வாகனம், கட்டிடம், மனை, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிலம் அல்லது சொத்துக்களை விற்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு அனைத்தும் சுபமாக முடிந்து பணம் கைக்கு வந்து சேரும்.
4.மீனம்
குருவின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசியின் லக்னாதிபதியான குரு மீன ராசியின் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வரக்கூடும். குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் கல்வித்துறையில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும்.
குருவின் இந்த பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திருமணத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வைப் பெறுவீர்கள் நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)