- Home
- Astrology
- Astrology: 50 வருடங்களுக்குப் பின் விஜயதசமி நாளில் ஒன்று சேரும் புதன்-செவ்வாய்.! இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்.!
Astrology: 50 வருடங்களுக்குப் பின் விஜயதசமி நாளில் ஒன்று சேரும் புதன்-செவ்வாய்.! இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்.!
Chevvai Budhan Conjunction: ஜோதிடத்தின்படி 50 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயதசமி நாளில் புதன் மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்றாக இணைவதால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை குவிக்க உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் புதன் இணைவு
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சியாகின்றன. அப்போது பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றனர். அந்த வகையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் மற்றும் செவ்வாய் பகவான் இருவரின் இணைப்பு விஜயதசமி நாளில் துலாம் ராசியில் உருவாக உள்ளது. ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.
மறுபுறம் புதன் பகவான் புத்திசாலித்தனத்தின் அடையாளமாக விளங்கி வருகிறார். புதன் ‘கிரகங்களின் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த இரு கிரகங்களின் இணைவால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் முதல் வீட்டில் புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் புதிய உயரங்களை எட்டுவீர்கள். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் கிடைக்கலாம்.
வாழ்க்கையில் புதிய தெளிவுகள் பிறக்கும். பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக பின்னடைவை சந்தித்தவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் செவ்வாயின் இணைவு பல வழிகளில் நன்மை பயக்கும். உங்கள் ராசியின் 11-வது வீடான வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் இந்த இணைவு நடக்க இருக்கிறது. எனவே இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
நிதி விஷயங்களில் நீங்கள் சரியாக திட்டமிட்டு முதலீடுகளை செய்தால் அது உங்களுக்கு நன்மை பயக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகும். வணிகம் மற்றும் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கலாம். எதிர்பாராத வழிகளில் பணம் கைக்கு வந்து சேரலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் செவ்வாய் புதன் இணைவது நடக்க இருக்கிறது. ஏழாவது வீடு என்பது திருமணம், கூட்டாண்மை, சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் மற்றும் உறவுகளை குறிக்கிறது. இதன் காரணமாக திருமணமான மேஷ ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் அற்புதமான தருணங்களை அனுபவிப்பார்கள். கூட்டாக வேலை செய்து வருபவர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
இந்த காலத்தில் உங்கள் தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும். இதனால் குழப்பமில்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, அதில் வெற்றியும் பெறுவீர்கள். தொழிலும் எதிர்பாராத வெற்றியை குவிப்பீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் புதனின் சேர்க்கை நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் உருவாகிறது. ஜாதகத்தில் நான்காவது வீடு என்பது குடும்பம், தாயார், மன நிறைவு, உணர்ச்சிகள், நல்வாழ்வு ஆகியவற்றை குறிக்கிறது. இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக நீங்கள் இந்த காலகட்டத்தில் ஆடம்பர வசதிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள்.
பல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்கள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவி வழி உறவுகளுடன் உறவு மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)