- Home
- Astrology
- Astrology: சந்திரனுடன் கூட்டணி அமைத்த செவ்வாய்.! செப்.24 க்கு பின்னர் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Astrology: சந்திரனுடன் கூட்டணி அமைத்த செவ்வாய்.! செப்.24 க்கு பின்னர் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Mahalakshmi Rajyog: செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திர பகவான் துலாம் ராசியில் செவ்வாயுடன் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சந்திரன் பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகரும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் பொழுது ராஜ யோகங்களும் உருவாகின்றன. இந்த ராஜயோகங்களின் விளைவுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கின்றன.
அந்த வகையில் செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திர பகவான் தனது ராசியை மாற்றுகிறார். நவகிரகங்களிலேயே மிகவும் வேகமாக நகரும் கிரகமாக சந்திர பகவான் அறியப்படுகிறார். இவர் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.
சந்திரன் செவ்வாய் கூட்டணி
தற்போது சந்திர பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். துலாம் ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் பயணித்து வரும் நிலையில், செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தின்படி மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மைகளை தரவுள்ளது. ஜோதிடத்தின்படி இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் செல்வம் மற்றும் பேச்சின் வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் பேச்சுத்திறன் அதிகரிப்பதால் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். இதன் காரணமாக உங்கள் தொழிலும் மேம்படும். பணியிடத்தில் வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் பணம் எங்காவது சிக்கி இருந்தால், அது மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். இதன் காரணமாக நிதி நிலை மேம்படும். குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஜோதிடத்தின்படி இந்த ராஜயோகம் கடக ராசியின் நான்காவது வீட்டில் உருவாகிறது. நான்காவது வீடு என்பது சொத்துக்கள், ஆடம்பரம் மற்றும் வசதி வாய்ப்புகளை குறிக்கிறது. இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறுவீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நல்ல லாபத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சார்ந்த விஷயங்களில் ஈடுபடுபவர்கள் கணிசமான பலன்களை பெறக்கூடும். இலக்குகளில் கவனம் செலுத்தினால் வெற்றி உங்கள் வசமாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் நன்மை பயக்கும். இந்த ராஜயோகம் உங்கள் ஒன்பதாவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கி, மனம் அமைதி அடையும். நிதி நிலைமை மேம்படும். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதை கண்கூடாக காண்பீர்கள். பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மனை, நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடுகளை செய்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)