- Home
- Astrology
- Astrology: சனியை நேராக பார்க்கும் சூரியன்.! உண்டாகும் அசுப யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Astrology: சனியை நேராக பார்க்கும் சூரியன்.! உண்டாகும் அசுப யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Sampatak Rajyog: சூரியன் மற்றும் சனி பகவான் இணைந்து உருவாக்கும் சமசப்தம ராஜயோகத்தால் நான்கு ராசிக்காரர்கள் மோசமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சூரியன் சனி சேர்க்கை
ஜோதிட சாஸ்திரங்களின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சில யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சூரியன் மற்றும் சனிபகவான் இருவரும் இணைந்து சபசப்தம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளித்தாலும், சில ராசிகளுக்கு மோசமான பலன்களை அளிக்கவுள்ளது.
சமசப்தம யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று எதிரே இருக்கும் பொழுது உருவாகிறது. சூரியன் கன்னி ராசியிலும், சனி மீன ராசியிலும் இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் நேரடியாக பார்ப்பதால் இந்த யோகம் உருவாகிறது.
சமசப்தம ராஜயோகம்
ஜோதிட சாஸ்திரங்களின்படி இந்த யோகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆற்றல், அதிகாரம், தலைமைப் பண்பு ஆகியவற்றின் காரகராக விளங்கும் சூரிய பகவானும், ஒழுக்கம், நீதி, கர்ம பலன்களுக்கு காராக விளங்கும் சனிபகவானுக்கும் இடையேயான மோதலை குறிக்கும் வண்ணம் உள்ளது.
இது அரசாங்கம், அதிகாரம், மக்களுக்கிடையே உலகளாவிய அளவில் பதட்டங்களை அதிகரிக்கும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஈகோ, வெறுப்பு, அதிகாரப் போட்டி, போராட்டங்களை தூண்டும் என்றும் அறியப்படுகிறது. இந்த யோகத்தால் பாதிப்புக்குள்ளாகும் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சமசப்தம யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். உடல் நலத்தில் ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் போட்டிகள் அதிகரிக்கலாம். கடன் சுமைகள் பெருகலாம். மறைவாக இருந்த எதிரிகள் வெளியில் வந்து நேரடியாக போட்டியை ஏற்படுத்தலாம். அதிக தனிமையை உணரலாம் இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும்.
பணியிடத்தில் மேல் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்பத்தில் தந்தை வழி உறவுகளுடன் மோதல்கள் ஏற்படலாம். எதிர்பாராத உடல் நலக் கோளாறுகளால் செலவுகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக நிதி நெருக்கடி உருவாக்கலாம். கவனத்துடன் செயல்படுபவர்கள் இந்த கடினமான காலகட்டத்தை எளிதில் கடந்து வரலாம்.
சிம்மம்
சமசப்தம ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். தேவையில்லாத பதற்றம், பயம் ஆகியவை ஏற்படலாம். திருமண உறவுகளில் சிக்கல்கள் உருவாகலாம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் காரணமாக பணியிடத்தில் மன அழுத்தம், வேலைப்பளு அதிகரிக்கலாம்.
சட்ட விஷயங்களுடன் போராடி வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கடுமையான நிதி சிக்கல்கள், உடல் நலக் கோளாறுகள், தேவையற்ற கவலைகள் இந்த காலத்தில் உங்களை வாட்டி வதைக்கும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சமசப்தம ராஜயோகம் உறவு முறைகளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். தனிப்பட்ட ஆசைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக பிறருடன் மோதல்கள் ஏற்படக்கூடும். ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மை இறங்கு முகமாக இருக்கும்.
வணிகக் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் அல்லது ஒப்பந்தங்கள் தாமதமாகலாம். இதன் காரணமாக சவால்கள் அதிகரிக்கலாம். நிதி தொடர்பான முடிவுகளில் தாமதம் ஏற்படலாம். கைக்கு வந்து சேர வேண்டிய பணங்கள் வராமல் போகலாம். ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் போட்டி அல்லது தொழிலில் போட்டியாளர்கள் உருவாகலாம். சட்ட ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம். ஆன்மீகத்தில் பற்று இல்லாமல் போகலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. குறிப்பாக செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, மன அழுத்தம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
கடன் சுமைகள் அதிகரிக்கலாம். செலவுகள் கணிசமாக உயரும். நிதி ஸ்திரத்தன்மை குறையும். தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எனவே மீன ராசி காரர்கள் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)