- Home
- Astrology
- Astrology: சனி சந்திரன் சேர்க்கையால் உருவான விஷயோகம்.! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனை ரவுண்டு கட்டி அடிக்கப் போகுது.!
Astrology: சனி சந்திரன் சேர்க்கையால் உருவான விஷயோகம்.! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனை ரவுண்டு கட்டி அடிக்கப் போகுது.!
Vish Yog 2025: சனி மற்றும் சந்திரன் மீன ராசியில் இணைவதால் ஏற்படும் விஷயோகம் அசுப யோகமாக கருதப்படுகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை மாற்றங்களை விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.

விஷயோகம் 2025
வேத ஜோதிடத்தின் படி விஷயோகம் என்பது அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர் 6 ஆம் தேதி சனி மற்றும் சந்திரன் இருவரும் மீன ராசியில் இணைய இருக்கின்றனர். நவகிரகங்களிலேயே சந்திரன் விரைவாக தனது ராசியை மாற்றக் கூடியவர். எனவே இவர் பிற கிரகங்களுடன் இணைந்து அவ்வப்போது சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்குகிறார். அந்த வகையில் சனி பகவானுடன் மீன ராசியில் இணைந்து விஷயோகத்தை உருவாக்குகிறார். எதிர் எதிர் சுபாவங்கள் கொண்ட இந்த இரு கிரகங்களின் சேர்க்கை மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தின் 12வது வீட்டில் இந்த விஷயோகம் உருவாக உள்ளது. இது நிதி சவால்களை குறிக்கிறது. இதன் காரணமாக திடீர் செலவுகள் அதிகரித்து உங்கள் நிதி நிலைமையில் அழுத்தம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். எந்த முடிக்க முடிவுகளையும் எடுப்பதற்கு முன்னர் கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். நிதி விஷயங்களில் அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது கடுமையான சிக்கல்களை உருவாக்கலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் விஷயோகம் உருவாவதால் உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சற்று அமைதியாக இருந்த பழைய நோய்கள் மீண்டும் தலை தூக்க நேரிடலாம். இதன் காரணமாக மருத்துவ செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். தேவையற்ற மருத்துவ சிகிச்சை அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளுக்காக பணம் வீணடிக்கப்படலாம். உங்கள் நெருக்கமான ஒருவர் மூலம் உங்களின் அந்தஸ்து குறையலாம் அல்லது அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். மேலும் முதலீடுகளுக்கும் இது சரியான நேரம் அல்ல. நிதி சார்ந்த முடிவுகளை ஒத்தி வைப்பது புத்திசாலித்தனம். புதிய திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால், சிறிது காத்திருந்து அதன் பின்னர் முதலீடு செய்யுங்கள்.
மீனம்
சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் விஷயோகம் மீன ராசியில் நேரடியாக உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அல்லது பெரிய தொகைகளை கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுப்பது அல்லது பணம் வாங்குவது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பட்ஜெட் படி செலவு செய்ய வேண்டும். திருமண வாழ்க்கை, துணையின் உடல்நலம் மற்றும் குடும்பத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். மூன்றாம் நபர்கள், அன்னியர்களை உங்கள் குடும்ப வாழ்க்கையில் தலையிட வைக்காதீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)