This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு தெளிவான, ஆக்கபூர்வமான, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் வாரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களைப. பற்றி கவலைப்படாமல் உங்கள் தனிப்பட்ட இலக்கின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்பு சிறப்பாக இருக்கும். குழு நடவடிக்கைகளில் வெற்றி பெறுவீர்கள். விரைவான செயல்பாடுகளை தவிர்த்து நிதானமாக செயல்படுவீர்கள். நீண்டகால பிரச்சினையை தீர்க்க புதிய மற்றும் தனித்துவமான கோணத்தில் அணுகுவீர்கள்.

ஆரோக்கியம்:

அதிக பனிச்சுமை காரணமாக உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். எனவே தியானம் அல்லது பிடித்த இசையை கேட்பது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சீரான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உணவு காரணமாக தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே உணவில் கவனம் செலுத்துங்கள். அதிகப்படியான உழைப்பை தவிர்த்து விடுங்கள். வேலைக்கு இடையே தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

நிதி நிலைமை:

இந்த வாரம் நிதி நிலைமை எதிர்பார்த்த அளவில் இருக்காது. நிதி நிலைமையை நிர்வகிக்க ஒழுக்கம் தேவைப்படும். செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் எதிர்பாராத அல்லது மறைமுகமான செலவுகள் வரும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். முதலீடுகள் குறித்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க நல்ல நேரம். இருப்பினும் அவசரம் இல்லாமல் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையுடன் தொடங்குவது நல்லது.

கல்வி:

மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சிக்கு இந்த வாரம் சிறந்த வாய்ப்புகளை வழங்கும். புதிய யோசனைகள் மற்றும் விஷயங்களை கற்க ஆர்வம் காட்டுவீர்கள். குழுவாக படிப்பது அல்லது சக மாணவர்களுடன் இணைந்து படிப்பது உங்கள் கற்றலை மேம்படுத்தும். தேர்வுகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் குழுவாக இணைந்து பணியாற்றுவது வெற்றியைத் தரும். உங்கள் பகுப்பாய்வுத் திறன் ஒரு சவாலான திட்டத்தில் கை கொடுக்கும். இதனால் நீங்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பங்களிப்பு மற்றும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில்கள் அல்லது வாய்ப்புகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகள் மற்றும் அன்பானவர்களுடன் பிணைப்பை அதிகப்படுத்த இது நல்ல நேரமாகும். இந்த வாரம் புரிதல் அதிகரிக்கும். பேச்சிலும் அணுகுமுறையிலும், கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறு தவறான புரிதல் கூட தேவையற்ற மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி விடக் கூடும். குடும்ப உறவில் பிணைப்பை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். உறவுகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் பணிவு மற்றும் அர்ப்பணிப்பு குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.

பரிகாரம்:

  • இந்த வாரம் ஏற்படும் சிறு சிறு காரியத் தடைகளை விலக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
  • தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.
  • ஏழைகள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு தானம் மற்றும் உதவிகளை செய்யுங்கள்.
  • எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)