- Home
- Astrology
- ராகுவின் சொந்த நட்சத்திரத்தில் குடியேறிய செவ்வாய் பகவான்.! இந்த 4 ராசிகள் வாழ்வில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
ராகுவின் சொந்த நட்சத்திரத்தில் குடியேறிய செவ்வாய் பகவான்.! இந்த 4 ராசிகள் வாழ்வில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Sevvai Sadayam Nakshatra Peyarchi : செவ்வாய் பகவான் வரும் மார்ச் 3-ம் தேதி, தான் அமர்ந்திருக்கும் கும்ப ராசியில் சதயம் நட்சத்திரத்திற்கு ராகுவின் நட்சத்திரம் பெயர்ச்சி ஆகிறார்.இதனால் பலன்பெறும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் வீரம் மற்றும் ஆற்றலின் காரகராக கருதப்படுகிறார். சதயம் நட்சத்திரமோ 'தீர்க்க முடியாதவற்றையும் தீர்க்கும்' ராகுவின் அம்சம் கொண்டது. செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தின் மூலம் அபரிமிதமான நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு அதிபதியே செவ்வாய் என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் உங்களுக்கு இரட்டிப்பு பலனைத் தரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து லாபம் ஈட்டுவீர்கள்.
மிதுனம்
பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்கு யோகமான காலமாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களிடம் இருந்து சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி படிப்புகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
கும்ப ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கும் செவ்வாய், இப்போது சதயம் நட்சத்திரத்திற்கு மாறுவது உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். களத்திர ஸ்தானத்தில் இந்த மாற்றம் நடப்பதால், தடைபட்ட திருமணங்கள் கைகூடும். பார்ட்னர்ஷிப் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் பதவிகளும் பாராட்டுக்களும் தேடி வரும்.
விருச்சிகம்
உங்கள் ராசி நாதன் செவ்வாய் 4-ம் வீட்டில் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது அசையாச் சொத்துக்களில் லாபத்தைத் தரும். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணம் நிறைவேறும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

