Karur Tragedy Video: கரூர் அசம்பாவிதம் குறித்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தாமதமாக வந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த வீடியோ உண்மையை நிரூபித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் - கரூர் கூட்ட நெரிசல்; தளபதி விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் தளபதி விஜய் தற்போது நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார். அடுத்ததாக நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் மக்களை சந்தித்து பேசினார். கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாட்டையே அதிச்சியடைய வைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்றும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த அந்த சாலையில் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது ஏன்? என பல்வேறு குழப்பத்தை கிளப்பியது.
என் வாழ்வை மாற்றிய படம்... காந்தாரா சாப்டர் 1 குறித்து நடிகை ருக்மிணி வசந்த் உருக்கம்
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு பின் தவெக தலைவர் தளபதி விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். விரைவில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளம் முழுதும் தவெகவினர் மற்றும் அசம்பாவிதம் நடந்த இடத்தில் நேரில் இருந்த சிலர் தவெக மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சந்திரகலாவை சிக்க வைக்க ஸ்கெச் போட்ட கார்த்திக்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
இது தொடர்பாக தவெக கட்சி ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், தவெக நிர்வாகி ஒருவர் தளபதி பிரச்சார இடத்திற்கு நேரில் வருகை தர தாமதமாகும் என்றும், அங்கு காத்திருக்கும் கட்சி தொண்டர்களுக்கும், ரசிகர், ரசிகைகளுக்கு தன்னால் தண்ணீர், சப்பாடு போன்ற உதவிகளை செய்ய நினைத்த போதும் கூட்ட நெரிசலால் அதை செய்ய இயலவில்லை என்றும் பேரிய வீடியோ வைரலாகி வருகிறது. இது தவெக கட்சியினர் முன்னெச்சரிக்கையாக இருந்ததை தெளிவாக காட்டுவதாக அந்த வீடியோவுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
