சந்திரகலாவை சிக்க வைக்க ஸ்கெச் போட்ட கார்த்திக்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Update: சந்திரகலாவின் சதி திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கார்த்திக், அவருக்கு போட்ட ஸ்கெச் என்ன? சிக்குவாளா சந்திரகலா? என்பதை பார்ப்போம்.

பரமேஸ்வரி பாட்டிக்கு தெரியவந்த விஷயம்:
எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 சீரியலின், நேற்றைய எபிசோடில்... பரமேஸ்வரி பாட்டி ரேவதி, துப்பாக்கி சூடு பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது, தன்னுடைய பேத்தி உயிர் பிழைத்துவிட்டால் கோவிலுக்கு தேவையான நிலத்தை வாங்கி தருவதாக கூறினார். அதை நிறைவேற்ற பார்க்கும் போது தான், அவர் கொடுப்பதாக கூறிய நிலம் ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி பெயரில் இருப்பது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரியவருகிறது. இதை அறிந்த ரேவதி, அப்போ அம்மா கையெழுத்து போட வேண்டுமே? என்று அதிர்ச்சியுடன் கேட்கிறாள்.
சாமுண்டீஸ்வரியின் கோபம்:
பிறகு ரேவதி வீட்டில் இருக்க, சாமுண்டீஸ்வரி அவளின் உடல்நிலையை தேற்ற பால் - பழத்தை கொடுத்து சாப்பிட சொல்லி பாசத்தோடு பார்த்து கொள்கிறாள். இதை தொடர்ந்து ராஜராஜன் கோவிலுக்கு நிலம் தர கையெழுத்து போட வேண்டும் என்று சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல, இதை கேட்ட சாமுண்டீஸ்வரி உங்க அம்மாவுக்காக நான் எதுக்கு கையெழுத்து போடணும்? அவங்க என் அம்மாவை கொன்னவங்க.. உங்களுக்கு தெரியாதா என்று கோபத்தோடு பேசுகிறாள்.
33 வயசாச்சு... கல்யாணம் எப்போ? திருமணம் பற்றி ஷாக்கிங் அப்டேட் கொடுத்த ‘கூலி’ வில்லி ரச்சிதா ராம்
சந்திரகலாவுக்கு ஸ்கெச்:
இதையடுத்து கார்த்தியிடம் இந்த விஷயம் வருகிறது. அடுத்ததாக சாமுண்டீஸ்வரி தங்களின் சூலையிலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கார்த்தியிடம் பணத்தை கொடுக்க, அவன் வேறு வேலை இருப்பதாக சொல்லி சந்திர கலாவிடம் கொடுத்து அனுப்புகிறான். கூடவே அவளுக்கு தெரியாமல் அதில் ஒரு போனையும் ஆன் செய்து அனுப்பி வைக்கிறான். சந்திரகலா என்ன பேசுகிறாள் அவளுக்கு பின்னணியில் உள்ளது யார் என்பதை அறியவே இப்படி ஒரு திட்டம் போடுகிறான் கார்த்திக்.
17 வருடத்திற்கு முன் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை... தனது பெயராக மாற்றிய காமெடி நடிகர் சாம்ஸ்!
சிக்குவாளா சந்திரகலா?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது? யாரிடமாவது சந்திரகலா வாயை விட்டு கார்த்திக் போட்ட ஸ்கெட்சியில் சிக்குவாளா? அல்லது கார்த்திக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுமா? என்பதை பற்றி அறிய கார்த்திகை தீபம் 2 சீரியலை தொடர்ந்து பாருங்கள்.