- Home
- Cinema
- 17 வருடத்திற்கு முன் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை... தனது பெயராக மாற்றிய காமெடி நடிகர் சாம்ஸ்!
17 வருடத்திற்கு முன் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை... தனது பெயராக மாற்றிய காமெடி நடிகர் சாம்ஸ்!
Comedy Actor Chaams: தமிழில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடி வேடத்தில் நடித்துள்ள சாம்ஸ் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளார். அப்படி அவர் என்ன பெயர் வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம்.

சாம்சின் உண்மையான பெயர்:
இதுகுறித்து அவருடைய தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவை சேர்ந்தவர்களுக்கும் வணக்கம். இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்தி... "என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை "சாம்ஸ்" (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். "சாம்ஸ்" என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன்".
கடையை தூக்க சொன்னது யார்? உண்மையை கண்டுபிடிக்க முத்து போடும் மாஸ்டர் பிளான் - சிறகடிக்க ஆசை சீரியல்
ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம்:
ஆனால் இயக்குனர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
33 வயசாச்சு... கல்யாணம் எப்போ? திருமணம் பற்றி ஷாக்கிங் அப்டேட் கொடுத்த ‘கூலி’ வில்லி ரச்சிதா ராம்
மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்த சாம்ஸ்:
எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று அழைப்பதோடு தங்கள் சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை நாங்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று தான் அழைப்போம் என்று சொல்லி அந்தக் காட்சியில் நான் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அலப்பறை தந்தேன் என்று சிலாகித்து பாராட்டி மகிழ்கின்றனர்.
மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்:
எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று, எனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்த பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் "ஜாவா சுந்தரேசன்" என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவன் அவர்களே. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துவிட்டு , முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் "ஜாவா சுந்தரேசன்" ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன்.
இயக்குனர் ஷங்கர் சாருக்கு நன்றி:
இந்த நேரத்தில் "அறை எண் 305'ல் கடவுள்" படத்தை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மீது நம்பிக்கை, காலம் வரும்போது யாரும் பெரிய உயரங்களைத் தொடலாம் என்பதற்கு அடையாளமாக அமைந்தது "ஜாவா சுந்தரேசன்" கதாபாத்திரம்.
ஜாவா சுந்தரேசனின் வேண்டுகோள்:
மீம்ஸ்களில் தங்களது creativity-யைக் கொட்டி, என்னை "ஜாவா சுந்தரேசன்" என சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சென்றடைய வைத்த அனைத்து மீம்ஸ் படைப்பாளிகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவை கதாபாத்திரங்களை எனக்கு தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சினிமா துறையை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை "ஜாவா சுந்தரேசன்" என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 17 வருடங்கள் ஆன பின்னர், அந்த கதாபாத்திரத்தின் பெயரை சாம்ஸ் சூடிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.