- Home
- Sports
- Sports Cricket
- குல்தீப், வருண் சுழலில் சிக்கி சிதைந்த பாகிஸ்தான்..! ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு எளிய இலக்கு!
குல்தீப், வருண் சுழலில் சிக்கி சிதைந்த பாகிஸ்தான்..! ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு எளிய இலக்கு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா இந்த இலக்கை துரத்தினால் எளிதாக ஆசிய கோப்பையை தட்டித் தூக்கி விடும்.

Asia Cup 2025 Final: India vs Pakistsan
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 38 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஃபக்கர் ஜமான் 25 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 30 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹானும், ஃபக்கர் ஜமானும் அதிரடியாக விளையாடினர். பும்ரா, வருண், குல்தீப்பின் பந்துகளை பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார்கள். பாகிஸ்தான் ஸ்கோர் 9.4 ஓவரில் 84 ஆக உயர்ந்தபோது 57 ரன் எடுத்த சாஹிப்சாதா ஃபர்ஹான் வருண் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபக்கர் ஜமான் அதிரடியாக விளையாடினார்.
கம்பேக் கொடுத்த இந்திய ஸ்பின்னர்கள்
பின்பு ஓரளவு சிறப்பாக விளையாடிய சயீம் அயூப்பை (14 ரன்) குல்தீப் காலி செய்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 12.5 ஓவரில் 113/2 என நல்ல நிலையில் இருந்தது. இதன்பிறகு தான் வருண், குல்தீப், அக்சர் படேல் சுழலில் சிக்கி பாகிஸ்தான் அணி சின்னாபின்னமானது. முகமது ஹாரிஸ் (0), நன்றாக விளையாடிய ஃபக்கர் ஜமான் (46), ஹுசைன் தலாத் (1), கேப்டன் சல்மான் ஆகா (8) என இந்திய ஸ்பின்னர்களின் பந்துகளில் சிக்கி சிதைந்து போனார்கள்.
பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்
இந்த சரிவில் இருந்து பாகிஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை. அந்த அணி 19.1 ஓவரில் வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 113/2 என வலுவாக இருந்த பாகிஸ்தான் அடுத்த 33 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்துள்ளது. 147 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்கிறது. இந்த இலக்கை துரத்தி இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.