கன்னியாகுமரி மாவட்டம் தாணுமாலயன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி மாணவ-மாணவிகள் ஏற்றிக்கொண்டு தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த கல்லூரி பேருந்து ராஜாக்கமங்கலம் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதியது.
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பட பச்சை பகுதியில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அரசு நிபந்தனையை மீறி அதிகாலை முதலே வியாபாரம் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மது அருந்தியுள்ளனர். பின்னர், போக்குவரத்து வீதிகளை மீறி மது அருந்திவிட்டு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த லூலு கிருஷ்ணா, பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றதால், லூலு கிருஷ்ணா பெற்றோருடன் வசித்து வந்தார்.
கன்னியாகுமரி அருகே ஆபாச படத்தை டியூசன் சென்டர் மாணவர்களின் பெற்றோர் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்த கான்ட்ராக்டர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் தமிழகத்தில் 2-வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் வெறும் நடிப்புக்காக கோடான கோடி சம்பாதிக்கிறார்கள் சினிமா நடிகர்கள். விடிந்தால், பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு இழுத்து மூடி தூங்கும் காஸ்ட்லி பெட்ஷீட் வரை அந்தந்த பட தயாரிப்பாளர்களின் பணத்திலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது. செலவே இல்லாமல் அப்படியே சுளையாக சேமிப்புக்கு போகும் கோடிகளில் அவர்களின் குடும்பம் செழித்து வளர்கிறது. இத்தனைக்கும் இந்த சினிமா என்று ஒன்று இல்லை என்றால் குடி மூழ்கி போயிடாது.
பள்ளி வகுப்பறையிலேயே மாணவியுடன் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவியின் முனங்கல் சத்தம் கேட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளி அருகே சென்றனர். அங்கு ஆசிரியரும், மாணவியுடம் இறுக்கி அனைத்தவாறு இருந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் ஆசிரியரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.
கடந்த ஆறு மாதத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி 24 ஆயிரத்து 212 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழக்குளும், நாளொன்றுக்கு 130 வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதாவது 15 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறு. என புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டினார். தற்போது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் அதுகுறித்து வெளியே சொல்ல முன்வருவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
Kanyakumari News in Tamil - Get the latest news, events, and updates from Kanyakumari district on Asianet News Tamil. கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.