கன்னியாகுமரி அருகே ஆபாச படத்தை டியூசன் சென்டர் மாணவர்களின் பெற்றோர் வாட்ஸ் அப்  குரூப்பில் பகிர்ந்த கான்ட்ராக்டர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் தமிழகத்தில் 2-வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் ரீதியிலான குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டன. ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள், சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்யபவர்கள், மற்றவர்களுடன் பகிர்பவர்களை போலீசார் கண்கொத்தி பம்பாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் முத்துராஜ் ஆபாச படங்களை தனது நண்பர்களுடன் பகிரும் போது, டியூசன் சென்டர் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதைகண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக டியூசன் சென்டர் உரிமையாளரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து, டியூசன் சென்டர் உரிமையாளர் செல்வகுமார் இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, ஆபாச படங்களை பகிர்ந்த குற்றத்தின்கீழ் முத்துராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.