புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமசிவாயத்துக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலத்திலிருந்து நைனார் மண்டபம் வழியாக வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது போல், புதுச்சேரியிலும் கிடைக்க அ.தி.மு.க. போராடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் இருந்து பாராளுமன்றம் சென்றால் தான் மாநில வளர்ச்சிக்கு அதிகம் நிதி கொண்டுவர முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தின் போது பேசினார்.
மோடி 3வது முறையாக பிரதமராகும் போது புதுச்சேரியின் பிரதிநிதியை அவரது பக்கத்தில் நீங்கள் அமர வைக்கவேண்டும் எனவே உங்கள் வாக்கு வீணாக்க கூடது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சோலை நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (35) என்பது தெரியவந்தது.
கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற நிலை புதுச்சேரியில் மாறி உள்ளதாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட சபாநாயகர், அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.