சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை போல, ரூபாய் 230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் கட்டப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையானது, இந்தியாவின் இரண்டாவது முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறதென கூறினார். மேலும் 230 கோடி ரூபாய் செலவிலான பன்நோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் அமைய உள்ளது என்று தெரிவித்தார்.

10:30 PM (IST) Oct 02
ஐடி நிறுவனங்கள் பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என இரண்டு வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
09:11 PM (IST) Oct 02
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தில் கணவன் முன்னிலையிலேயே பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
08:28 PM (IST) Oct 02
திருச்செந்தூர் கோவிலில் அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதேபான்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
07:49 PM (IST) Oct 02
நெய்வேலி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை பூட்டை உடைத்து கொள்ளை அடித்த திருடர்கள் செய்த கில்லாடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
07:12 PM (IST) Oct 02
தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
06:23 PM (IST) Oct 02
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது.
05:56 PM (IST) Oct 02
மகாத்மா காந்தியடிகளின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா திருவுருவ சிலைக்கு ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க
05:42 PM (IST) Oct 02
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
05:12 PM (IST) Oct 02
பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தனது கணவரை வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
05:02 PM (IST) Oct 02
திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
04:58 PM (IST) Oct 02
உபியில் நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:22 PM (IST) Oct 02
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும் ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் படிக்க
04:08 PM (IST) Oct 02
இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
03:43 PM (IST) Oct 02
சித்து முசேவாலா கொலைக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காவலில் இருந்து தலைமறைவானது குறித்து பாஜக ஆம் ஆத்மி மீது கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.
03:26 PM (IST) Oct 02
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
03:11 PM (IST) Oct 02
சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாத்து, நஷ்டம் இல்லாமல் சேமிப்புக் கிடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மேலும் படிக்க
03:04 PM (IST) Oct 02
மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்-ன் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஓ.பி.ரவிந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
02:01 PM (IST) Oct 02
தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:56 PM (IST) Oct 02
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
01:43 PM (IST) Oct 02
அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் படத்தால் முறியடிக்க முடியாவிடாலும், வெளிநாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் படிக்க
01:21 PM (IST) Oct 02
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர் , தலைமை காவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
12:37 PM (IST) Oct 02
தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
12:16 PM (IST) Oct 02
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு, டுவிட்டரில், ‘எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது' என ஒரு பதிவை போட்டிருந்தார். பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
12:11 PM (IST) Oct 02
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது அட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
11:47 AM (IST) Oct 02
பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..
11:36 AM (IST) Oct 02
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இரவு நேரத்தில் புறா பிடிக்க சென்றவர் மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
11:18 AM (IST) Oct 02
வாய்தா பட நடிகை தீபிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
10:53 AM (IST) Oct 02
மதுபோதையில் கே எஸ் அழகிரியின் பேரன் மற்றும் உறவுக்காரப் பெண்ணை தாக்கிய இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க
10:51 AM (IST) Oct 02
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விற்யோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் மற்றும் பகுப்பு விநியோகிக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
10:45 AM (IST) Oct 02
மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. அந்த வகையில் டெல்லியிலுள்ள ராஜ்காட்டியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
10:26 AM (IST) Oct 02
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க
09:57 AM (IST) Oct 02
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், அதிவேகமாக ரூ.150 கோடி வசூலைக் கடந்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. மேலும் படிக்க
09:19 AM (IST) Oct 02
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் தவறாக சித்தரித்து உள்ளதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க
08:57 AM (IST) Oct 02
மின் வெட்டால் புதுச்சேரி மாநிலம் இருளில் மூழ்கியதால் முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியில் தீப்பந்தம் ஏந்தியும், சாலைகளில் டயரை தீயிட்டு கொளுத்தியும் எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க..
08:30 AM (IST) Oct 02
தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் முழக்கம் எழும் என்பதால், தமிழக அரசு இதற்கு அனுமதியளிக்கக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.
08:11 AM (IST) Oct 02
பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை, ஒரு மிகப்பெரிய பாடம். எப்போதுமே எல்லாஇடத்திலுமே ராஜாக்கள் போற்றப்படுவதில்லை, ராஜாக்களை உருவாக்கிய கிங்மேக்கர்களே போற்றப்படுகிறார்கள் நினைவுகூரப்படுகிறார்கள். மேலும் படிக்க
08:09 AM (IST) Oct 02
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்து மக்களுக்கு கல்வி அறிவை கொடுத்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் அக்டோபர் 2 ஆகும். அவரது ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட கல்வி பணிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:07 AM (IST) Oct 02
ஒரு மாநில முதலமைச்சரால் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியுமா...? என்ற கேள்விக்கு விடையாய் இருப்பவர் தான் கர்ம வீரர் காமராசர். அரசியல் சாணக்கியரான அவர் சில நேரங்களில் எடுத்த அசாதாரண முடிகளையும், திட்டங்களையும் விளக்குகிறது இந்த தொகுப்பு
08:07 AM (IST) Oct 02
எத்தனையோ அரசியல் தலைவர்கள் வருகின்றனர் மறைகின்றனர். ஆனால் தான் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழகத்தின் தலையெழுத்தையும் திருத்தி எழுதிய படிக்காத மேதை ஒருவர் உண்டென்றால் அது பெருந்தலைவர் காமராஜராகத்தான் இருக்க முடியும். மேலும் படிக்க
08:06 AM (IST) Oct 02
காமராஜரின் 47-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் காமராஜர் பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள் மற்றும் அவரின் சிறப்பான பொன் மொழிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.