Asianet News TamilAsianet News Tamil

பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை..? மத்திய, மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்- அன்புமணி

பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Anbumani urged that central and state governments should implement the ban on smoking in public places
Author
First Published Oct 2, 2022, 11:45 AM IST

பொது இடங்களில் புகை பிடித்தல்

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியிருந்தாரலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது.  அது ஒரு வரலாற்று நிகழ்வு! புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.  பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர்.

புறா பிடிக்க சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்.. மின்சார வேலியில் சிக்கி துடிதுடித்து பலி..

Anbumani urged that central and state governments should implement the ban on smoking in public places

பெண்கள்,குழந்தைகள் பாதிப்பு

அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது! இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பொது இடங்களில் புகைப்பதை அனுமதிப்பதால் ஏற்படும் பெருங்கேடு இது! யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

காற்றில் பறந்த ஸ்டாலின் வாக்குறுதிகள்...! மேடைக்கு மேடை முழங்கிய மூன்று C க்கள் மட்டும் அமோகமாக உள்ளது- ஓபிஎஸ்


 

Follow Us:
Download App:
  • android
  • ios