Asianet News TamilAsianet News Tamil

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக 540 பணியிடங்கள்.. 10 ஆம் படித்திருந்தால் போதும்.. விவரம் இங்கே

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர் , தலைமை காவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

CISF Recruitment Notification 2022 for Sub inspector and Head Constable posts
Author
First Published Oct 2, 2022, 1:19 PM IST

காலியிடங்கள்: 540

பணயின் பெயர்: துணைக் காவல் ஆய்வாளர், தலைமை காவலர் 

பணியின் வகை: மத்திய அரசு வேலை

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: 

மத்தியல் தொழில் பாதுகாப்பு படையின் www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்.. Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரகளின் வயது 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் இருந்து சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

துணைக் காவல் ஆய்வாளர் பணிக்கு நிலை 5யின் படி மாத சம்பளமாக  ரூ. 29,200 - ரூ. 92,300 வரை வழங்கப்படும்.

அதே போல் தலைமை காவலர் பணிக்கு நிலை 4யின் படி மாத சம்பளமாக ரூ. 25,500 - ரூ. 81,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

உடற்தகுதி, எழுத்து, திறனறிவு ஆகிய தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

மேலும் படிக்க:ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

Follow Us:
Download App:
  • android
  • ios