கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த காவல்துறை அதிகாரி.. இதுதான் சட்டம் ஒழுங்கா? வைரல் வீடியோ!
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தில் கணவன் முன்னிலையிலேயே பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கோயம்பேடு நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் தனது கணவருடன் பெண்மணி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்களது பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த நபர் அப்பெண்ணனை சீண்டியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது கணவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர் சில்மிஷம் செய்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!
அதற்கு, அந்த நபர் நான் போலீஸ்காரன் என்று திமிருடன் பதில் அளித்துள்ளார். மேலும், அப்பெண்ணின் கணவரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார். வாக்குவாதம் செய்த காவல்துறை அதிகாரி போதையில் இருப்பது போல் தெரிகிறது. கண்டக்டர் உட்பட யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
அந்த பேருந்தில், பயணம் மேற்கொண்ட யாரோ ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இக்காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. அநீதி இழைக்கப்பட்ட பெண்ணிற்கும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவரது கணவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு அதிகாரி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்