MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2022, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது  நானே வருவேன் திரைப்படம் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியானதால் இப்படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

24

இருப்பினும் தனுஷும் செல்வராகவனும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். அவர்கள் இருவரும் அடுத்ததாக இணைய உள்ள படம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இப்படத்தை 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்...  இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்

34

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.

44

அதன்படி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் அந்த ரோலில் தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே அவர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் தான் நான் நடித்திருந்தேன். தற்போது இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தாலும் சிறப்பாக இருக்கும்” என பார்த்திபன் கூறி உள்ளார். 

இதையும் படியுங்கள்...  வந்தியத்தேவன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது... தவறாக சித்தரித்துள்ளதாக பரபரப்பு புகார் - சிக்கலில் மணிரத்னம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved